Headlines

பள்ளி வளாகத்திற்குள் புகுந்த மலைப்பாம்பு : அலறி ஓடிய மாணவர்கள்

பள்ளி வளாகத்திற்குள் புகுந்த மலைப்பாம்பு : அலறி ஓடிய மாணவர்கள்

வாணியம்பாடி அருகே மலைகிராமத்தில் உள்ள அரசு பள்ளி வளாகத்தில் புகுந்த 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டு வனப்பகுதியில் விட்டனர்.

வாணியம்பாடி அடுத்த ஜவ்வாது மலைத்தொடரில் அமைந்துள்ள மலைரெட்டியூர் மலைகிராமம். இக்கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலைப்பள்ளியில், இன்று 6 அடி நீளமுள்ள மலைப்பாம்பு, பள்ளி வளாகத்தில் புகுந்தது.

உடனடியாக இதனை கண்ட பள்ளி மாணவர்கள் அலறியடித்து பள்ளி வகுப்பறையில் இருந்து வெளியேறியனர்.

உடனடியாக இதுகுறித்து, பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊர் மக்கள் ஆலங்காயம் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், பள்ளி வளாகத்தில் ஊர்ந்து சென்ற மலைப்பாம்பை பத்திரமாக பிடித்து, ஆலங்காயம் காப்பு வனப்பகுதியில் விடுவித்தனர்.

அரசு பள்ளி வளாகத்தில் மலைப்பாம்பு புகுந்த சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *