Headlines
விநாயகர் ஊர்வலத்தில் மோதல் : சமாதானம் செய்ய சென்றவர் கொலை - போலீஸ் குவிப்பு

விநாயகர் ஊர்வலத்தில் மோதல் : சமாதானம் செய்ய சென்றவர் கொலை – போலீஸ் குவிப்பு

கடலூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தைத் தொடர்ந்து இரு கிராமங்களைச் சேர்ந்தவர்களிடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக மீண்டும் மோதல் ஏற்பட்ட நிலையில், சண்டையை விலக்கச் சென்றவர் தலையில் தடியால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் கீழ்க்கவரப்பட்டு மற்றும் மேல்க்கவரப்பட்டு கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு தங்கள் கிராமங்களில் இருந்து தனித்தனியாக மினி லாரிகளில் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று, கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரையில் சிலைகளை கரைத்துள்ளனர். அப்போது…

Read More
சிவகங்கையில் இளைஞர்கள் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை : குவிக்கப்பட்ட போலீசார்

சிவகங்கையில் இளைஞர்கள் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை : குவிக்கப்பட்ட போலீசார்

சிவகங்கை அருகே கண்மாய் கரையில் மதுபானம் அருந்தியபோது ஏற்பட்டதாக கூறப்படும் தகராறில், இருவர் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கூறப்படும் 6 பேர் கொண்ட கும்பலை பிடிக்க, 5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள குருந்தணி கிராமத்தைச் சேர்ந்த…

Read More
மறுக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பாஸ் : பறிபோன முதியவர் உயிர்

மறுக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பாஸ் : பறிபோன முதியவர் உயிர்

வேலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட இலவச பேருந்து பயண பாஸை செல்லாது எனக்கூறி அரசு பேருந்து நடத்துனர் இரு முதியவர்களை கீழே இறக்கிவிட்ட நிலையில் மற்றொரு பேருந்து மோதி முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் காயமடைந்த மற்றொரு முதியவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தம் செதுக்கரை ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜி. குடியாத்தம் சீவூர் முருகன் நகர் சேர்ந்தவர் சதாசிவம். இருவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் கடந்த திங்களன்று திருச்செந்தூர் சென்று விட்டு…

Read More
சி.பி.எம்(எல்) நிர்வாகி மீது கொலை வெறி தாக்குதல் : போலீசார் பஞ்சாயத்து பேசியதாக புகார்

சி.பி.எம்(எல்) நிர்வாகி மீது கொலை வெறி தாக்குதல் : போலீசார் பஞ்சாயத்து பேசியதாக புகார்

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், ஆத்துவம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் இந்திய கம்யூனிஸ்டு (மார்க்சிஸ்டு–லெனினிஸ்டு) கட்சியின் மாவட்ட குழு உறுப்பினராக இருந்து வருகிறார். இவருக்கும், பக்கத்து நிலத்தைச் சேர்ந்தவருக்கும் நீண்ட காலமாக நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இதுதொடர்பாக வெங்கடேசன் கடந்த ஆகஸ்டு 11-ந் தேதி சந்தவாசல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக தெரிகிறது. புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் உரிய விசாரணை நடத்தாமல் இருதரப்பினரையும் அழைத்து சமரசம் பேசி பிரச்சினையை முடித்ததாகவும், இதனால் எந்தவிதமான சட்ட நடவடிக்கையும்…

Read More
கண்மாயில் கொல்லப்பட்ட இருவர் : குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் தீவிரம்

கண்மாயில் கொல்லப்பட்ட இருவர் : குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் தீவிரம்

சிவகங்கை பழமலைநகர் அருகே உள்ள கொடிக்காடு கிராம கண்மாயில் இருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் மாவட்டம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை நகர் காவல் நிலையத்திற்கு, கொடிக்காடு கிராமத்தில் உள்ள கண்மாயில் இருவர் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், சுமார் 35 வயது மதிக்கத்தக்க இரண்டு ஆண்கள் பலத்த வெட்டுக்காயங்களுடன் முகங்கள் சிதைந்த நிலையில் உயிரிழந்து கிடப்பதை கண்டறிந்தனர். முதற்கட்ட விசாரணையில்,…

Read More
ஆப்பு வைத்த ஆன்லைன் ஆப் நட்பு – வாலிபரை தாக்கி வழிப்பறி

ஆப்பு வைத்த ஆன்லைன் ஆப் நட்பு – வாலிபரை தாக்கி வழிப்பறி

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே, சமூக வலைதள ஆப் மூலம் ஏற்பட்ட தொடர்பில் வாலிபர் ஒருவர் தாக்கப்பட்டு பணம் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் பம்பாதிரிபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பச்சமுத்து.30,. இவர் குறிப்பிட்ட சமூக வலைதள ஆப் மூலம் அறிமுகமான நபர்களை சந்திக்க உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி பகுதிக்கு சென்றுள்ளார். அங்கிருந்து அவரை மதியனூர் அருகே உள்ள விமான ஓடுதளம் பகுதிக்கு அழைத்துச் சென்ற மர்ம நபர்கள், அவரை தாக்கி 2 ஆயிரம் ரூபாய் பணத்தை…

Read More
காலி மதுபாட்டிலுக்கு 5 ரூபாய் தான் : டாஸ்மாக் ஊழியர்கள் புது ரூல்ஸ்

காலி மதுபாட்டிலுக்கு 5 ரூபாய் தான் : டாஸ்மாக் ஊழியர்கள் புது ரூல்ஸ்

மதுபாட்டில்களை பொது இடங்கள், விவசாய நிலங்களில் வீசுவதை தவிர்க்க டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக 10 ரூபாய் வசூலித்து காலி மதுபாட்டிலை திரும்ப தரும்போது அந்த 10 ரூபாயை வழங்கும் திட்டம் கடந்த திமுக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் வாடிக்கையாளர்களிடம் கூடுதலாக வசூல் செய்த தொகையிலும் கமிஷன் அடிக்கும் டாஸ்மாக் ஊழியர்களின் நடவடிக்கை கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம் கமலாபுரத்தில் அரசு மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த மதுபான கடையில் மது வாங்கிய மது…

Read More
டெண்டர் முறைகேடு புகார் : தாம்பரம் மாநகராட்சி ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

டெண்டர் முறைகேடு புகார் : தாம்பரம் மாநகராட்சி ஆணையர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

தாம்பரம் மாநகராட்சியில் செய்து முடித்த ரூ.45 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு மீண்டும் ஒப்பந்தம் விடபட்டதால் மாநகராட்சி ஆணையாளர் பாலசந்தர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னை அடுத்த தாம்பரம் அருகே புது பெருங்களத்தூர் ரவுண்டானாவில் தாம்பரம் மாநகராட்சி சார்பில் ரூ. 27 லட்சம் மதிப்பீட்டில் அசோகா தூண் அமைக்கபட்டு அதனை அமைச்சர் சரத்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பாலசந்தர் ஆகியோர் ஜூலை 29 ம்தேதி திறந்து வைத்தனர். அதேபோல் ரூபாய் 18 லட்சம் மதிப்பீட்டில் சிட்லபாக்கம் ஏரி…

Read More
சிகிச்சைக்கு வந்த மூதாட்டியின் நகை திருட்டு : செவிலியர் கைது

சிகிச்சைக்கு வந்த மூதாட்டியின் நகை திருட்டு : செவிலியர் கைது

குளித்தலை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த மூதாட்டியிடம், 7.5 பவுன் தங்க செயினை திருடிய தனியார் மருத்துவமனை செவிலியரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம், குளித்தலை காவிரி நகரில் உள்ள ஜோதிமணி என்கின்ற தனியார் மருத்துவனை செயல்பட்டு வருகிறது. அங்கு கடந்த 2ஆம் தேதி கிருஷ்ணராயபுரம் அருகே பிச்சம்பட்டி குடித்தெருவை சேர்ந்த தனபாக்கியம் (65) என்பவர் உடல் நல குறைவு காரணமாக சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். கழுத்தில் 7 .5 பவுன் எடையுள்ள தங்க கொடி…

Read More
80 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை : வாலிபர் கைது

80 வயது மூதாட்டிக்கு பாலியல் தொல்லை : வாலிபர் கைது

வேலூர் அண்ணா சாலையில் சாலையோரம் தங்கியிருந்த 80 வயது ஆதரவற்ற மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 25 வயது வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். வேலூர் மாவட்டம் இறைவன்காடு பகுதியைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி ஆதரவற்ற நிலையில் வேலூர் அண்ணா சாலையில் யாசகம் பெற்று சாலையோரம் தங்கி வந்த நிலையில் நேற்று இரவு அந்த மூதாட்டியிடம் வாலிபர் ஒருவர் தவறாக நடந்து கொள்வதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் சம்பவ…

Read More