வேலூர் அண்ணா சாலையில் சாலையோரம் தங்கியிருந்த 80 வயது ஆதரவற்ற மூதாட்டிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 25 வயது வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வேலூர் மாவட்டம் இறைவன்காடு பகுதியைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி ஆதரவற்ற நிலையில் வேலூர் அண்ணா சாலையில் யாசகம் பெற்று சாலையோரம் தங்கி வந்த நிலையில் நேற்று இரவு அந்த மூதாட்டியிடம் வாலிபர் ஒருவர் தவறாக நடந்து கொள்வதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மூதாட்டியிடம் பாலியல் தொல்லை கொடுத்த அந்த நபரை கையும் களவுமாக பிடித்து அந்த வாலிபரிடம் நடத்திய விசாரணையில், அவர் வேலூர் மாநகர் ஆர்.எஸ். நகர் பகுதியைச் சேர்ந்த தேவராஜ் (25) என்பதும் அவர் மதுபோதையில் இருந்தபோது சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக சமூக நலத்துறை அலுவலர்கள் அளித்த புகாரின் பேரில், வேலூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
ஆதரவற்று சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த மூதாட்டியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட வாலிபரால் வேலூரில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
