Headlines
வங்கிகள் இணைப்பு : பரவும் போலி அறிவிப்பு

வங்கிகள் இணைப்பு : பரவும் போலி அறிவிப்பு

இந்தியன் வங்கி, கனரா வங்கி உள்ளிட்ட 9 பொதுத்துறை வங்கிகள் 3 பொதுத்துறை வங்கி குழுமங்களுடன் இணைக்கப்பட்டதாக பரப்பபட்ட ஆவணம் போலியானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியன் வங்கி, பேங்க் ஆப் மகாராஷ்டிரா,சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா ஆகியவை எஸ்.பி.ஐ வங்கியுடனும்,யூனியன் பேங்க் ஆப் இந்தியா,பேங்க் ஆப் இந்தியா, பஞ்சாப் & சிந்த் வங்கி ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும், கனரா வங்கி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, யூகோ வங்கி ஆகியவை பேங்க் ஆப் பரோடாவுடனும்…

Read More
வெள்ளி பட்டறையில் கொள்ளை : மர்ம நபர்களுக்கு போலீசார் வலை

வெள்ளி பட்டறையில் கொள்ளை : மர்ம நபர்களுக்கு போலீசார் வலை

செங்கோட்டையில் வெள்ளி பொருட்கள் செய்யும் பட்டறையின் பூட்டை உடைத்து கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகரில் காசு கடை பஜாரில் ராமகிருஷ்ணன் என்பவர் வெள்ளி கொலுசு கடை மற்றும் நகை செய்யும் பட்டறை நடத்தி வருகிறார்.இப்பகுதியில் ஏராளமான நகை கடைகளும் உள்ளது. கடந்த 15 தேதி செவ்வாய்க்கிழமை அன்று இரவு 10 மணி அளவில் வெள்ளிப் பட்டறை கடையை அடைத்து விட்டு ராமகிருஷ்ணன் சென்றுவிட்டார். நேற்று முன் தினம்…

Read More
குடும்பம் நடத்த வரமறுத்த மனைவியின் மூக்கை கடித்த கணவன் : மாமனாரும் காயம்

குடும்பம் நடத்த வரமறுத்த மனைவியின் மூக்கை கடித்த கணவன் : மாமனாரும் காயம்

தெலுங்கானா மாநிலம் மஞ்சூரியால் மாவட்டம் கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மணி சந்தர். அவருடைய மனைவி மமதா. இரண்டு பேருக்கும் ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமண நடைபெற்று இரண்டு மகள்கள் உள்ளனர். மதுவுக்கு அடிமையான மணி சந்தர் மனைவியை வரதட்சணை கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மமதா கணவனுடன் சண்டை போட்டு பிறந்த வீட்டிற்கு சென்று அங்கு குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் மனைவியை மீண்டும் வீட்டுக்கு வரவழைக்க மணி சந்தர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டார். ஆனால்…

Read More
4 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் : 74 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

4 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல் : 74 வயது முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை

கன்னியாகுமரி மாவட்டம் திக்குறிச்சி கல்லுவிளையைச் சேர்ந்த ரவீந்திரன் (74) என்பவர், 4 வயது சிறுமியிடம் தவறாக நடந்ததாக தொடரப்பட்ட போக்ஸோ வழக்கில் குற்றவாளி என நாகர்கோவில் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் ரவீந்திரனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கில் சிறப்பாக பணியாற்றிய…

Read More
தொடர் வாகன திருட்டு : சிறார் உட்பட இருவர் கைது, 11 வாகனங்கள் பறிமுதல்

தொடர் வாகன திருட்டு : சிறார் உட்பட இருவர் கைது, 11 வாகனங்கள் பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட 17 வயது சிறுவன் உள்பட இருவரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து 11 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். திருப்பத்தூர் அரசு மருத்துவமனை உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இருசக்கர வாகனங்கள் திருடுபோனதாக புகார்கள் வந்தன. இதுகுறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டு நடைபெற்ற பகுதிகளில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, சந்தேகத்திற்குரிய நபர்களிடம் விசாரணை…

Read More
பாட்டிலுக்கு பத்து ரூபா : தட்டிக்கேட்ட இளைஞரின் செல்போனை பிடிங்கி வீசிய டாஸ்மாக் ஊழியர்

பாட்டிலுக்கு பத்து ரூபா : தட்டிக்கேட்ட இளைஞரின் செல்போனை பிடிங்கி வீசிய டாஸ்மாக் ஊழியர்

தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோவில் புறவழிச்சாலையில் அரசு டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் மது பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்கி உள்ளனர். இதனையடுத்து மது வாங்க வந்த மணிகண்டன் என்ற இளைஞர், மது பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வாங்குவதை கண்டித்து அதனை செல்போன் மூலம் படம் பிடித்துள்ளார். இதனால் இளைஞருக்கும், டாஸ்மாக் கடை ஊழியருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.அப்போது இளைஞரின் செல்போனை பறித்து டாஸ்மாக் விற்பனையாளர் அதனை தூக்கி எறிந்துள்ளார். இந்த…

Read More
சிவகங்கை இரட்டை கொலை வழக்கில் 5 பேர் கைது

சிவகங்கை இரட்டை கொலை வழக்கில் 5 பேர் கைது

சிவகங்கை பையூர் கொத்தகுடி கண்மாய் பகுதியில் இரண்டு வாலிபர்கள் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர. சிவகங்கை – தொண்டி சாலையில் உள்ள கொத்தக்குடி கண்மாயில் நேற்று பூப்பாண்டி, தெய்வேந்திரன் என்ற இரண்டு இளைஞர்களை 6 பேர் கொண்ட கும்பல் ஓட, ஓட விரட்டி கொலை செய்தது. இதுகுறித்து சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக்…

Read More
கள்ளக்குறிச்சி : விநாயகர் ஊர்வலத்தில் பட்டாசுகளை பறிமுதல் செய்த எஸ்பி

கள்ளக்குறிச்சி : விநாயகர் ஊர்வலத்தில் பட்டாசுகளை பறிமுதல் செய்த எஸ்பி

​கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று முக்கிய இடங்களில் அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் கரைப்பிற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. ​கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கச்சிராயப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து புறப்பட்ட விநாயகர் சிலை ஊர்வலங்கள், கோமுகி அணையை நோக்கி அணிவகுத்துச் சென்றன. ​இந்நிலையில், அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹ்ஷனாஸ் தலைமையில் நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ​ஊர்வலம் கள்ளக்குறிச்சி நகரின் மையப்பகுதியான நான்குமுனை சந்திப்பைக் கடந்தபோது, எஸ்.பி. ஹ்ஷனாஸ்…

Read More
கட்டையால் தாக்கப்பட்ட ஓட்டுநர் உயிரிழப்பு : 3 பேர் வெறிச்செயல்

கட்டையால் தாக்கப்பட்ட ஓட்டுநர் உயிரிழப்பு : 3 பேர் வெறிச்செயல்

திமிரி அடுத்த கருங்காலிக்குப்பம் கிராமத்தில் பள்ளி பேருந்து ஓட்டுநரை மூன்று மர்ம நபர்கள் கட்டையால் தாக்கியதில், பலத்த காயமடைந்த ஓட்டுநர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் கம்மவான்பேட்டை பகுதியைச் சேர்ந்த இம்ரான் (38). இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். கம்மவான்பேட்டையில் இறைச்சிக் கடை நடத்தி வந்த இவர், தனியார் பள்ளியில் பேருந்து ஓட்டுநராகவும் பணியாற்றி வந்தார். இந்நிலையில், நேற்று வழக்கம்போல் பள்ளி முடிந்ததும் மாணவ, மாணவிகளை கருங்காலிக்குப்பம் கிராமத்தில்…

Read More
டூவிலரில் அரிவாளை சுழற்றிய வாலிபர்கள் கைது - போலீசார் தீவிர விசாரணை

டூவிலரில் அரிவாளை சுழற்றிய வாலிபர்கள் கைது – போலீசார் தீவிர விசாரணை

திண்டுக்கல், பழனிரோடு, முத்தனம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக கையில் அரிவாளை சுழற்றிக்கொண்டே வாலிபர்கள் சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதுகுறித்து மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் உத்தரவின் பேரில் ஒட்டன்சத்திரம் டிஎஸ்பி கார்த்திகேயன் மேற்பார்வையில் ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் தலைமையில் சார்பு ஆய்வாளர் வேலுச்சாமி மற்றும் காவலர்கள் அப்பகுதிகளில் உள்ள 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து மாங்கரையை சேர்ந்த மாரியப்பன் மகன் கோகுல்குமார்(24), முருகன்…

Read More