கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே, சமூக வலைதள ஆப் மூலம் ஏற்பட்ட தொடர்பில் வாலிபர் ஒருவர் தாக்கப்பட்டு பணம் பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் பம்பாதிரிபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பச்சமுத்து.30,. இவர் குறிப்பிட்ட சமூக வலைதள ஆப் மூலம் அறிமுகமான நபர்களை சந்திக்க உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி பகுதிக்கு சென்றுள்ளார்.
அங்கிருந்து அவரை மதியனூர் அருகே உள்ள விமான ஓடுதளம் பகுதிக்கு அழைத்துச் சென்ற மர்ம நபர்கள், அவரை தாக்கி 2 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது.
காயமடைந்த பச்சமுத்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், ஆப் மூலம் இதுபோன்று மேலும் யாரேனும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார்களா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
