Headlines

TCD Newsroom

ரியல் எஸ்டேட் அதிபர் சுட்டுக்கொ** : 16 குண்டுகளால் சல்லடையான உடல்

ரியல் எஸ்டேட் அதிபர் சுட்டுக்கொ** : 16 குண்டுகளால் சல்லடையான உடல்

டெல்லியில் உள்ள ஒரு உடற்பயிற்சி கூடத்துக்கு வெளியே அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியாணாவின் சோனிபாத் மாவட்டத்தைச் சேர்ந்த பிரமோத் தாஹியா என்பவர், டெல்லியில் நரேலா பகுதியில் உள்ள உடற்பயிற்சி கூடத்துக்கு வழக்கம் போல் இன்று காலை வந்துள்ளார். பயிற்சியை முடித்துவிட்டு வெளியே வந்த அவரை, இரு சக்கர வாகனத்தின் வந்த அடையாளம் தெரியாத இருவர் சரமாரியாக சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிவிட்டனர்….

Read More
மானிய விலையில் வெங்காய விற்பனை : துவக்கி வைத்த அமைச்சர்கள்

மானிய விலையில் வெங்காய விற்பனை : துவக்கி வைத்த அமைச்சர்கள்

நியாய விலை கடைகளில் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்யும் திட்டத்தை உணவுத் துறைஅமைச்சர் வெங்கட்ரமணன், கூட்டுறவுத்துறை அமைச்சர் காந்திராஜ் ஆகியோர் சென்னையில் துவங்கி வைத்தனர். அண்டை மாநிலங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக தமிழ்நாட்டிற்கு வரும் வெங்காயத்தின் அளவு கடுமையாக குறைந்துள்ளது. இதனால் வெங்காயம் விலை கடந்த ஒரு வாரமாக 60 முதல் 80 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் , சந்தையில் வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம்…

Read More
பட்டாசு ஆலையில் வெடிவிபத்தில் ஒருவர் பலி : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அசம்பாவிதம்

பட்டாசு ஆலையில் வெடிவிபத்தில் ஒருவர் பலி : ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அசம்பாவிதம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி ஒருவர் உடல் கருகி பலியானார். காயமடைந்த மற்றொரு தொழிலாளி மீட்கப்பட்ட நிலையில் வேறு யாரேனும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனரா என தீயணைப்புத்துறையினர் தேடி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே டி.மானகசேரியில் இயங்கி வரும் தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை வழக்கம் போல் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பட்டாசுக்கான மருந்துக்கலவையில் வேதியியல் மாற்றம் ஏற்பட்டு திடீரென வெடி விபத்து ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதில் ஒரு அறை…

Read More
சாலையில் பெரும் பள்ளம் : வாழைக்கன்று நட்டு இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம்

சாலையில் பெரும் பள்ளம் : வாழைக்கன்று நட்டு இந்திய கம்யூனிஸ்ட் போராட்டம்

கோவில்பட்டியில் சாலையில் ஏற்பட்ட ஆபத்தான குழியை சரிசெய்யாமல் அலட்சியமாக செயல்படும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வாழைக்கன்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டி இரயில்வே சுரங்கப்பாதை இளையரசனேந்தல் பகுதியில் உள்ள சாலையில் ஆபத்தான பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரழக்கும் அபாயம் நிலவி வருகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்து நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. மக்களின் உயிரை அலட்சியமாக கருதும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று…

Read More
ஆவேசமடைந்த சி.வி.சண்முகம் : சட்டப்பேரவையில் பரபரப்பு

ஆவேசமடைந்த சி.வி.சண்முகம் : சட்டப்பேரவையில் பரபரப்பு

முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் குறித்து பேச முன்னாள் சட்ட அமைச்சரான தன்னை அனுமதிக்காமல், தளவாய் சுந்தரத்தை சபாநாயகர் அனுமதித்ததால் சி.வி. சண்முகம் கோபமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுகவில் அதிருப்தி எம்எல்ஏவாக இயங்கி வரும் சி.வி. சண்முகம், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வருகிறார். இதனிடையில் சமீபத்தில் அவர் சட்டமன்றத்தில் இபிஎஸ்ஸை பாராட்டி பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றது. இந்நிலையில்இன்று சட்டமன்றம் கூடியதும் 110 விதிகளின் கீழ் முதல்வர்…

Read More
நெல்லையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு

நெல்லையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு

தமிழக வெற்றி கழக ஆட்சி அமைந்த பின்னர் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார். அவருக்கு அக்கச்சியில் மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது இந்த சூழலில் தனது ராஜினாமா கடிதத்தை ஏற்க வேண்டும் இல்லை என்றால் தன்னை எம்எல்ஏவாக செயல்படுவதற்கு இடைத்தேர்தல் வரை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து சட்டமன்ற சபாநாயகர்…

Read More
திருப்பதி கோவில் அதிகாரி வீட்டில் ரூ.5 கோடி தங்கம், வெள்ளி பறிமுதல் : லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

திருப்பதி கோவில் அதிகாரி வீட்டில் ரூ.5 கோடி தங்கம், வெள்ளி பறிமுதல் : லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

திருப்பதி ஏழுமலையான் கோவில் துணை நிர்வாக அதிகாரி வீட்டில் இருந்து சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள், வெள்ளிப் பொருட்களைஆந்திர மாநில லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருப்பதி ஏழுமலையான் கோவில் துணை நிர்வாக அதிகாரியாக பணியில் இருப்பவர் லோகநாதம். தகவல் ஒன்றின் அடிப்படையில் ஆந்திர மாநில லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திருப்பதியில் இருக்கும் அவருடைய வீடு, திருமலையில் உள்ள அவருடைய முகாம் அலுவலகம், திருப்பதி அருகே ஏற்பேடு கிராமத்தில் இருக்கும் அவருடைய…

Read More
விஏவுக்கு செல்போனில் கொலை மிரட்டல் புகார் : இருவர் கைது

விஏவுக்கு செல்போனில் கொலை மிரட்டல் புகார் : இருவர் கைது

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே கிராம நிர்வாக அலுவலருக்கு செல்போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் விவகாரத்தில் இருவரை போலீசார் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பியுள்ளனர். பெருமாச்சேரி மேற்கு குரூப் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் ரகுராஜன் என்பவருக்கு கடந்த 2-ம் தேதி செல்போன் மூலம் அழைப்பு வந்ததாக கூறப்படுகிறது. அந்த அழைப்பில் பேசிய நபர், “மற்ற சமூகத்தினரை மணல் அள்ள விடுவாய்… எங்களை மட்டும் மணல் அள்ள விட மாட்டாயா? இன்னும்…

Read More
தனியார் மருத்துவமனையிடம்பணம் கேட்டு மிரட்டல்? - விடியோ வைரல்

தனியார் மருத்துவமனையிடம்பணம் கேட்டு மிரட்டல்? – விடியோ வைரல்

காரைக்குடி அருகே விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்த சம்பவத்தில், மருத்துவமனை நிர்வாகத்திடம் ரூ. 10 லட்சம் கேட்டு மிரட்டியதாக வெளியான வீடியோ அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவங்கை மாவட்டம் அரியக்குடியைச் சேர்ந்த பரசுராமன் (42) மற்றும் இவரது மனைவி மீனாட்சி (32) ஆகிய இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் மானகிரி பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த பொலிரோ சரக்கு வாகனம் மோதிய விபத்தில், மீனாட்சிக்கு…

Read More
கையால் எழுதி கமிஷன் கேட்ட அதிகாரி : வீடியோ வைரல்

கையால் எழுதி கமிஷன் கேட்ட அதிகாரி : வீடியோ வைரல்

வேப்பூர் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்ஒப்பந்ததாரரிடம் கமிஷன் தொகை கேட்பதாக கூறப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக வட்டார வளர்ச்சி அலுவலராக சித்தார்த் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் ஏற்கனவே பெரம்பலூர் ஊராட்சி ஒன்றியத்தில் பணியாற்றிய நிலையில், தற்போது பணி மாறுதலாகி வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் நிதி, சட்டமன்ற உறுப்பினர் நிதி, நாடாளுமன்ற உறுப்பினர்…

Read More