Headlines

ஆவேசமடைந்த சி.வி.சண்முகம் : சட்டப்பேரவையில் பரபரப்பு

ஆவேசமடைந்த சி.வி.சண்முகம் : சட்டப்பேரவையில் பரபரப்பு

முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் குறித்து பேச முன்னாள் சட்ட அமைச்சரான தன்னை அனுமதிக்காமல், தளவாய் சுந்தரத்தை சபாநாயகர் அனுமதித்ததால் சி.வி. சண்முகம் கோபமடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அதிமுகவில் அதிருப்தி எம்எல்ஏவாக இயங்கி வரும் சி.வி. சண்முகம், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வருகிறார். இதனிடையில் சமீபத்தில் அவர் சட்டமன்றத்தில் இபிஎஸ்ஸை பாராட்டி பேசியது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றது.

இந்நிலையில்
இன்று சட்டமன்றம் கூடியதும் 110 விதிகளின் கீழ் முதல்வர் ஜோசப் விஜய் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் தனித்தீர்மானத்தை கொண்டு வந்தார்.

இதனையடுத்து உறுப்பினர்கள் பேசிய நிலையில், சபாநாயகர் அதிமுகவின் தளவாய் சுந்தரத்தை பேச அழைத்தார்.

அப்போது சி.வி.சண்முகம் திடீரென ஆவேசமாக தனது இருக்கையை விட்டு வந்து சபநாயகரிடம் முறையிட்டார். மேலும் அவையை விட்டு வெளியேற முயன்றார். இதனால் சட்டப்பேரவையில் பரபரப்பு நிலவியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *