Headlines

நெல்லையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு

நெல்லையில் ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு

தமிழக வெற்றி கழக ஆட்சி அமைந்த பின்னர் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இசக்கி சுப்பையா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்.

அவருக்கு அக்கச்சியில் மாவட்ட செயலாளர் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் பதவிகள் வழங்கப்பட்டுள்ளது இந்த சூழலில் தனது ராஜினாமா கடிதத்தை ஏற்க வேண்டும் இல்லை என்றால் தன்னை எம்எல்ஏவாக செயல்படுவதற்கு இடைத்தேர்தல் வரை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்து சட்டமன்ற சபாநாயகர் இடம் மனு அளித்திருந்தார்.

இந்த விவகாரம் வெறும் பேசும் பொருளாக மாறி உள்ளது இந்த சூழலில் அம்பாசமுத்திரம் தொகுதி அதிமுக தொண்டர்கள் என பெயரிடப்பட்டு நெல்லை மாநகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.

அதில் ஒரே சிரிக்கிறது உன்னை பார்த்து அம்பை தொகுதி மக்களின் தீர்ப்பை மதிக்காத இசக்கி சுப்பையாவே மீண்டும் எம்எல்ஏ பதவி ஒரு கேடா என கேள்வி எழுப்பி ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே தான் பதவியை ராஜினாமா செய்தது குறித்தும் அந்த கடிதத்தை சபாநாயகர் ஏற்காமல் இடைத்தேர்தல் தள்ளிப் போவது குறித்தும் இசக்கி சுப்பையா அறிக்கை விடப்பட்டிருந்த நிலையில் அவரைக் கண்டித்து அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதி அதிமுக தொண்டர்கள் என பெயரிடப்பட்டு ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் பெரும் பரபரப்பு நிலவி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *