கோவில்பட்டியில் சாலையில் ஏற்பட்ட ஆபத்தான குழியை சரிசெய்யாமல் அலட்சியமாக செயல்படும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் வாழைக்கன்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி இரயில்வே சுரங்கப்பாதை இளையரசனேந்தல் பகுதியில் உள்ள சாலையில் ஆபத்தான பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி உயிரழக்கும் அபாயம் நிலவி வருகிறது.
இதுகுறித்து பலமுறை புகார் அளித்து நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. மக்களின் உயிரை அலட்சியமாக கருதும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்திய கம்யூனிஸ்ட நகர செயலாளர் செந்தில் ஆறுமுகம் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, சாலையில் உள்ள குழியில் வாழைக்கன்றுகளை நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
