Headlines
மருத்துவமனைக்குள் கத்தியுடன் வந்த நபர் : அதிரச்சியில் ஆழ்ந்த நோயாளிகள்

மருத்துவமனைக்குள் கத்தியுடன் வந்த நபர் : அதிரச்சியில் ஆழ்ந்த நோயாளிகள்

விபத்தை ஏற்படுத்திய நபரை காவல்துறை கண்டுபிடிக்காத ஆத்திரத்தில் மாற்றுத்திறனாளி ஒருவர் கத்தியுடன் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை அரசனி முத்துப்பட்டி அருகே உள்ள நைனாங்குளம் கிராமத்தை சேர்ந்த மலையாண்டியின் மகன் பாலகிருஷ்ணன் (38) இவரது தாயார் மல்லிகா, கடந்த 25ஆம் தேதி பொன்னா குளம் விளக்கு பகுதியில் நடந்து சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த மல்லிகா, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read More
முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, அவரது மகன் மீது மண் கொள்ளை புகார் : அதிகாரிகள் ஆய்வு

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, அவரது மகன் மீது மண் கொள்ளை புகார் : அதிகாரிகள் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் மலப்பம்பாடி ஏரியில் ரூ.8 கோடி அளவில் மண்ணை சட்டவிரோதமாக அள்ளியதாகவும், அந்த மண்ணை கொட்டிதான் நிலத்தை சமன்படுத்தி 2025-ல் திமுக இளைஞர் அணி மாநாடு நடத்தியதாகவும் முன்னாள் அமைச்சர் எ வ வேலு, அவர் மகன் குமரன் மற்றும் அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு மகன் குமரன் நெடுஞ்சாலை துறை ஒப்பந்ததாரரிடம் இருந்து 124 ஏக்கர் நிலத்தை குறைந்த விலைக்கு வாங்கியதாகவும் அறப்போர் இயக்கம்…

Read More
இழப்பீடு வழங்காமல் எண்ணெய் குழாய் பதிப்பு : தடுக்க முயன்ற விவசாயிகள் கைது

இழப்பீடு வழங்காமல் எண்ணெய் குழாய் பதிப்பு : தடுக்க முயன்ற விவசாயிகள் கைது

திருப்பூர் மாவட்டம் கண்டியன் கோவில் அருகே பூசாரி பாளையம், தளிஞ்சி காட்டு தோட்டத்தில் விவசாயிக்கு இழப்பீடு வழங்காமல் ஐ டி பி எல் எரிவாயு, எண்ணெய் குழாய் பதிக்கும் பணியை செய்வதாகவும் ஏராளமான போலீசார் உதவியுடன் விவசாயிகளை மிரட்டி பணிகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டி விவசாயிகள் 50க்கும் மேற்பட்டோர் பணியை தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போலீசார் உடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர் இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் அனைவரையும் போலீசார் கைது செய்து அலகுமலை பகுதியில் உள்ள…

Read More
கட்டுப்பாட்டை இழந்த கார் : மின்கம்பத்தால் உயிர் தப்பிய நபர்

கட்டுப்பாட்டை இழந்த கார் : மின்கம்பத்தால் உயிர் தப்பிய நபர்

கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் குற்றியாடி மாநில நெடுஞ்சாலையில் சொகுசுகார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. கார் பேரம்பா அருகே கடியங்காடு பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து அருகில் சாலையோரமிருந்த மின்கம்பதில் மோதி விபத்துக்குள்ளானது. அங்கு உள்ள உணவகத்தின் காவலாளி மின் கம்பத்தின் அருகில் நாற்காலிபோட்டு அமர்ந்திருந்தார்.மின்கம்பம் காரை தடுத்து நின்றதால் நூலிழையில் அவர் உயர்தப்பினார். இந்த விபத்து குறித்து பேரம்பா காவல்துறையினர் வழக்குபதிவு செய்ததுடன் அப்பகுதியில் பொருத்தபட்டிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு…

Read More
ரீல்ஸ் மோகம் : சீண்டிய இளைஞர்களை ஆக்ரோஷமாக விரட்டிய காட்டு யானை

ரீல்ஸ் மோகம் : சீண்டிய இளைஞர்களை ஆக்ரோஷமாக விரட்டிய காட்டு யானை

கேரளம் மாநிலம் இடுக்கி மாவட்டம் காந்தலூர் கிராமத்தில் முகாமிட்டிருந்த காட்டு யானையை, இளைஞர்கள் சிலர் அருகில் சென்று சீண்டியபடி வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க முயன்றுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த காட்டு யானை திடீரென இளைஞர்களை நோக்கி வந்து ஆக்ரோஷமாக விரட்ட முயன்றது. இதனால் அதிர்ச்சியடைந்த இளைஞர்கள் அங்கிருந்து அலறியபடி ஓட்டம் பிடித்தனர். அதிர்ஷ்டவசமாக யானையிடம் சிக்காமல் அவர்கள் உயிர் தப்பினர். காட்டு யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க…

Read More
ஒரே இரவில் இருவேறு கொலைகள் : விருதுநகரில் பரபரப்பு

ஒரே இரவில் இருவேறு கொலைகள் : விருதுநகரில் பரபரப்பு

விருதுநகர் மாவட்டத்தில் ஒரே இரவில் இரண்டு இடங்களில் கொலை சம்பவங்கள் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாமியாரை கொன்ற மருமகன் விருதுநகர் அருகே பாலையம்பட்டியை சேர்ந்த சிவா இன்டஸ்ட்ராகிராம் மூலம் அறிமுகமான செவல்பட்டியை சேர்ந்த வாசக தேவி என்ற பெண்ணிடம் பழகி நாளடைவில் அது காதலாக மாறி கடந்த 6 மாதத்திற்கு முன் இருவரும் ஜாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். ஒரு வாரம் மட்டும் இருவரும் சேர்ந்து வாழ்ந்த நிலையில் சிவா மதுபோதையில் தினந்தோறும் மனைவி வாசகா…

Read More
மதுராந்தகம் அருகே சோகம் : கார் டயரால் பறிபோன 4 உயிர்கள்

மதுராந்தகம் அருகே சோகம் : கார் டயரால் பறிபோன 4 உயிர்கள்

மதுராந்தகம் அருகே கார் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர். 3 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 7 பேர் புதுச்சேரி சென்றுவிட்டு காரில் மீண்டும் சென்னை நோக்கி வந்துள்ளனர். திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே வந்தபோது காரின் பின்பக்க டயர் வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில்…

Read More
நீட் தேர்வில் தேர்ச்சி- கலந்தாய்வில் விடுபட்ட பெயர் : மாணவி தற்கொலை

நீட் தேர்வில் தேர்ச்சி- கலந்தாய்வில் விடுபட்ட பெயர் : மாணவி தற்கொலை

பாளையங்கோட்டையில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும், முதற்கட்ட கலந்தாய்வில் பெயர் இடம்பெறாததால் மாணவி தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்லைபாளையங்கோட்டை அன்பு நகர் அருகே உள்ள சித்தார்த்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன். இவர் ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். அவருக்கு ஸ்ருதி லயா (வயது 21) என்ற மகள் மற்றும் 10-ம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளனர்.ஸ்ருதி லயா பாளையங்கோட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 2023-ம் ஆண்டு பிளஸ்-2 முடித்துள்ளார்….

Read More
பந்தய மாட்டுடன் இளைஞர் பலி : இடியால் சோகத்தில் ஆழ்ந்த கிராமம்

பந்தய மாட்டுடன் இளைஞர் பலி : இடியால் சோகத்தில் ஆழ்ந்த கிராமம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகேஇடி தாக்கியதில் பந்தயத்திற்காக ஆசையாய் வளர்த்த காளை மாட்டுடன், கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த கிராமத்தையே சோகத்தில் ஆழத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த தெற்கு மஞ்சகரை கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டித்துரை. இவருடைய மகன்பூவரசன்(18). இவர் புதுக்கோட்டையில் உள்ள மாமன்னர் கலை அறிவியல் கல்லூரியில் இளங்கலை2-ம் ஆண்டு படித்து வரும் நிலையில் மாட்டுவண்டி பந்தயத்திற்கான பந்தய மாடுகளையும் வளர்த்து வந்துள்ளார். கல்லூரி முடித்து நேற்று மாலை வீடு திரும்பிய நிலையில் மஞ்ச…

Read More
நேபாள வெள்ளம் : தமிழகம் திரும்பிய 21 பேர் - வரவேற்ற அமைச்சர்கள்

நேபாள வெள்ளம் : தமிழகம் திரும்பிய 21 பேர் – வரவேற்ற அமைச்சர்கள்

நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரிடரால் புனித யாத்திரை சென்ற தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்தவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது. முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவுறுத்தலின் பேரில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் வினோத், தென்னரசு ஆகியோர் டெல்லியில் தமிழர்கள் குறித்து தகவல் சேகரித்து அவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றனர். முத்ற்கட்டமாக சென்னையை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 5 பேர், கடலூரை சேர்ந்த 5 பெண்கள் உள்பட 9…

Read More