மதுராந்தகம் அருகே கார் டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் கல்லூரி மாணவர்கள் 4 பேர் உயிரிழந்தனர். 3 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் 7 பேர் புதுச்சேரி சென்றுவிட்டு காரில் மீண்டும் சென்னை நோக்கி வந்துள்ளனர்.

திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகம் அருகே வந்தபோது காரின் பின்பக்க டயர் வெடித்தது.
இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த 7 பேரையும் மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 4 மாணவர்கள் உயிரிழந்தனர். 3 பேர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
