கேரளா மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் குற்றியாடி மாநில நெடுஞ்சாலையில் சொகுசுகார் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. கார் பேரம்பா அருகே கடியங்காடு பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து அருகில் சாலையோரமிருந்த மின்கம்பதில் மோதி விபத்துக்குள்ளானது.
அங்கு உள்ள உணவகத்தின் காவலாளி மின் கம்பத்தின் அருகில் நாற்காலிபோட்டு அமர்ந்திருந்தார்.
மின்கம்பம் காரை தடுத்து நின்றதால் நூலிழையில் அவர் உயர்தப்பினார்.
இந்த விபத்து குறித்து பேரம்பா காவல்துறையினர் வழக்குபதிவு செய்ததுடன் அப்பகுதியில் பொருத்தபட்டிருந்த கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
