நேபாளத்தில் ஏற்பட்டுள்ள பேரிடரால் புனித யாத்திரை சென்ற தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் தமிழகத்தை சேர்ந்தவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி உள்ளது.
முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவுறுத்தலின் பேரில் அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் வினோத், தென்னரசு ஆகியோர் டெல்லியில் தமிழர்கள் குறித்து தகவல் சேகரித்து அவர்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

முத்ற்கட்டமாக சென்னையை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 5 பேர், கடலூரை சேர்ந்த 5 பெண்கள் உள்பட 9 பேர், மயிலாடுதுறையை சேர்ந்த 2 பெண்கள் உள்பட 3 பேர், திருச்சியை சேர்ந்த 3 பெண்கள், கிருஷ்ணகிரியை சேர்ந்த ஒருவர் என 21 பேர் மீட்கப்பட்டனர்.
இவர்கள் டெல்லியில் இருந்து விமானம் முலம் இரவு 10.40 மணிக்கு சென்னை விமான நிலையத்திற்கு வந்தனர். இவர்களை அமைச்சர்கள் ஆனந்த், சரத்குமார் ஆகியோர் வரவேற்றனர்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் என். ஆனந்த் கூறுகையில் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் 4 அமைச்சர்கள் டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர் ராஜமோகன் உள்ளிட்ட நான்கு அமைச்சர்களும் டெல்லியில் முகாமிட்டு இருக்கின்றன நிலைமை குறித்து உடனுக்குடன் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு தகவல் தெரிவித்து இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
நேபாளில் சிக்கி உள்ள தமிழர்களே மீட்பதற்காக மீட்பு பணிகள் குறித்து பணிகளை மேற்கொண்டு இருப்பதாகவும் மேலும் நேபாளில் சிக்கி உள்ள தமிழர்களை பத்திரமாக மீட்டு அனைவரும் நல்லபடியாக வருவார்கள் என்று அமைச்சர் என் ஆனந்த் தெரிவித்தார்.
மேலும் நேபாளில் இருந்து இடர்பாடுகளில் சிக்கி தவித்து சென்னை திரும்பிய பெண்மணி கூறுகையில், அங்கு செல்லும் பொழுது திடீரென்று கரும்புகை போல் வந்தது. அதனை கண்டு அனைவரும் அங்கே இருந்த நிலையில் மேலும் எங்கிருந்து அதிக அளவு தண்ணீர் வந்தது என்று தெரியவில்லை் அதனை கண்டவுடன் அனைவரும் அங்கிருந்து தப்பிப்பதற்கு இடத்தை தேடி இருந்த நிலையில் தங்களை அந்த நீரானது சூழ்ந்தது. உடனடியாக அருகில் இருந்த மலை மீது ஏறி தங்கள் உயிரை காப்பாற்றிக் கொண்டோம் என்று தெரிவித்தனர்.
மேலும் தாங்கள் இருந்த பகுதியில் இருந்து சுமார் 15 அடி தூரத்திலேயே அந்த பெருவெள்ளமானது வந்தது என்றும், சுமார் இந்த நிலை இரண்டு மணி நேரத்திற்கு மேல் நீடித்ததாகவும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து தங்களுக்கு அங்கிருந்து உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர்.
மேலும் அங்கிருந்து ஹெலிகாப்டர் நிற்கும் இடத்திற்கு செல்வதற்கு சுமார் இரண்டு கிலோமீட்டர் மலை மீது ஏறி சென்றோம் என்றும் தெரிவித்தனர்.
மேலும் பெருவெள்ளத்தை அருகில் நின்று கண்டது பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான நிலையில் இருந்தோம் என்றும், தங்களுடன் வந்தவர்கள் நிலை என்ன ஆனது என்றே தெரியாத நிலை இருப்பதாகவும் தெரிவித்தனர்.
மேலும் தங்களுடன் மொத்தம் மூன்று பேருந்துகளில் 60 பேர் வந்ததாகவும் தெரிவித்தனர்.
அதில் 21 பேர் தற்போது வந்துவிட்டதாகவும் தெரிவித்தனர்.
மேலும் மற்றவர்கள் விரைந்து வீடு திரும்ப வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றும் தெரிவித்தனர்
மேலும் நேபாள அரசு இந்திய அரசு ,சீன அரசு, தமிழக அரசு என அனைவரும் ஒன்றிணைந்து அங்கிருந்து தங்களை மீட்டு டெல்லிக்கு அழைத்து வந்தார்கள் என்றும், டெல்லியில் மத்திய வெளி உறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தங்களை வரவேற்றதாகவும் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் நான்கு பேரும் தங்களை வரவேற்றதாகவும் தெரிவித்தனர்.
தொடர்ந்து விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவர்கள் விமான நிலையத்தில் அமைச்சர் ஆனந்த் அமைச்சர் சரத் உள்ளிட்டோர் வரவேற்றதாகவும் தெரிவித்தனர் .
தங்களது உறவினர்களை சந்தித்தது பெரும் மகிழ்ச்சியாக இருந்தது என்றும் தெரிவித்தனர்
