Headlines
4 குழந்தைகளின் உயிரை பறித்த அதிவேக பால் வேன் : திண்டுக்கல் அருகே சோகம்

4 குழந்தைகளின் உயிரை பறித்த அதிவேக பால் வேன் : திண்டுக்கல் அருகே சோகம்

வடமதுரை அருகே சாலையோரத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகள் மீது பால் வேன் மோதி விபத்தில் 4 குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தனர். ​திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகேயுள்ள கொல்லப்பட்டி சமத்துவபுரம், கணவாய் மேடு பகுதிக்கு அருகே இன்று பிற்பகல் பழனிச்சாமி என்பவரது மனைவி அஞ்சம்மாள் (60) ஆடு மேய்த்துக்கொண்டிருந்தார். அவருடன் உறவினர் குழந்தைகளும் அங்கு சென்று சாலையோரமாக அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தனர். ​அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த பால் வேன் (407 வாகனம்), ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து…

Read More
தாய்லாந்தில் மகன் அடித்து கொ**ப்பட்டதாக தாய் புகார் : உறுதியளித்த அமைச்சர்

தாய்லாந்தில் மகன் அடித்து கொ**ப்பட்டதாக தாய் புகார் : உறுதியளித்த அமைச்சர்

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே கே.வேலாயுதபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் தாய்லாந்து நாட்டில் ஹோட்டல் வேலைக்குச் சென்ற நிலையில், அடித்துக் கொலை செய்யப்பட்டதாக அவரது உறவினர்கள் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த இளைஞரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதுடன், அவரது உயிரிழப்புக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழக அரசுக்கு உறவினர்கள் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினரும், சிறு, குறு மற்றும்…

Read More
வரக் கூடிய தகவல்கள் நம்பிக்கை அளிக்கவில்லை - ஈஷா யோகா மையம்

வரக் கூடிய தகவல்கள் நம்பிக்கை அளிக்கவில்லை – ஈஷா யோகா மையம்

நேபாளம் சென்ற 80 வெளிநாட்டினர் தொடர்பாக வரக் கூடிய தகவல்கள் நம்பிக்கை தருவதாக இல்லை ஈஷா யோகா மையம் தெரிவித்துள்ளது. தங்களது குழுவில் இருந்து 80 வெளிநாட்டினர் நேபாள வெள்ளத்தில் சிக்கிய நிலையில் விளக்கம் அளித்துள்ளஈஷா யோகா மையம், காத்மாண்டுவில் இருந்து மீட்பு, நிவாரணக் குழுக்களுடன் தொடர்பு கொண்டு 80 பேரை தேடி வருகிறோம். 80 பேரும் தங்கியிருந்த இடம் 45-50 அடிக்கு சேறும், மண்ணுமாக மூடிக் கிடக்கிறது. தங்கி இருந்தவர்கள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை என…

Read More
காவிரி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல்

காவிரி விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல்

விகிதாச்சார அடிப்படையில் தமிழ்நாட்டுக்கான நீரை கர்நாடகா திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த 24 ஆம் தேதி நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகத்துக்கு ஏற்கனவே உள்ள பற்றாக்குறை நீரை சரி கட்டும் விதத்தில் விகிதாச்சார அடிப்படையில் 22,000 கன அடி நீர் வீதம் அடுத்த 15 நாட்களுக்கு திறந்து விட கோரிக்கை…

Read More
சட்டமன்ற நிகழ்வுகள் வேதனை அளிக்கிறது : நயினார் நாகேந்திரன் விமர்சனம்

சட்டமன்ற நிகழ்வுகள் வேதனை அளிக்கிறது : நயினார் நாகேந்திரன் விமர்சனம்

தமிழக சட்டமன்றத்தில் நடக்கும் நிகழ்வுகள் வேதனை அளிக்கிறது. எதை பேசவேண்டுமோ அதனை பேச மறுக்கிறார்கள் லஞ்சம் கொடுத்ததாக அமைச்சரே சட்டமன்றத்தில் பேசும் நிலை உள்ளது. நேபாள வெள்ளத்தில் பாஸ்போர்ட்டை இழந்தவர்களுக்கு வீடுகளுக்கே சென்று பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக நெல்லையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் நயினார் கூறியதாவது, நேபாளத்தில் நடைபெற்ற பெரு வெள்ளம் யாரும் எதிர்பாராத…

Read More
அழுகிய நிலையில் சிறுவர்கள் சடலம் : ஆலங்காயத்தில் நடந்தது என்ன?

அழுகிய நிலையில் சிறுவர்கள் சடலம் : ஆலங்காயத்தில் நடந்தது என்ன?

ஆலங்காயம் அருகே விவசாய கிணற்றில் அழுகிய நிலையில் 2 சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அருகேபெத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் பிரகாசம். இவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில், தண்ணீர் பாய்ச்சுவதற்காக மின் மோட்டாரை இயக்கிவிட்டு கிணற்றை எட்டிப் பார்த்துள்ளார். அப்போது கிணற்றுக்குள் இரண்டு சடலங்கள் நீரில் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக மின் மோட்டாரை நிறுத்திவிட்டு ஆலங்காயம் போலீசாருக்கு தகவல்…

Read More
கல்லூர் ஏரியில் மீன்பிடித் திருவிழா : குவிந்த கிராம மக்கள்

கல்லூர் ஏரியில் மீன்பிடித் திருவிழா : குவிந்த கிராம மக்கள்

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகேகல்லூர் கிராமத்தில் உள்ள ஏரியில் இன்று நடைபெற்ற மீன்பிடித் திருவிழாவை தொழிலாளர் நலவாரிய உறுப்பினர் KNT. சங்கர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் கல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு உற்சாகமாக மீன்பிடித்தனர் பெண்கள், இளைஞர்கள், முதியவர்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரும் ஏரியில் இறங்கி மீன்களை பிடித்து மகிழ்ந்தனர். ஏரியில் கெண்டை, விரால், ஜிலேபி, உழுவை உள்ளிட்ட பல்வேறு வகை மீன்கள் கிடைத்ததால், பொதுமக்கள்…

Read More
வாக்குமூலத்தை மாற்றிவிட்டனர் : போலீசார் மீது புகார் தெரிவித்த வீ த லீடர் உறுப்பினர்

வாக்குமூலத்தை மாற்றிவிட்டனர் : போலீசார் மீது புகார் தெரிவித்த வீ த லீடர் உறுப்பினர்

குறிஞ்சிப்பாடி போலீசார் தனது வாக்கு மூலத்தை மாற்றி விட்டதாக மர்ம நபர்களால் வெட்டபட்டு படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வீ த லீடர் உறுப்பினர் வெளியிட்டுள்ள வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி குட்டைக்கார தெருவில் வசித்து வருபவர் விஜயகுமார். அவர் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலையின் வீ த லீடர் அமைப்பை சேர்ந்தவர். இவர் நேற்று முன் தினம் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டபட்டு படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக பாண்டிச்சேரி தனியார்…

Read More
காவலுக்கு சென்ற மூதாட்டி அடித்து கொலை : கள்ளக்குறிச்சி அருகே துணிகரம்

காவலுக்கு சென்ற மூதாட்டி அடித்து கொலை : கள்ளக்குறிச்சி அருகே துணிகரம்

கள்ளக்குறிச்சி அருகேகம்பு காட்டிற்கு காவலுக்கு சென்ற மூதாட்டியை அடித்து கொலை நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி அருகே மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமியின் மனைவி விருதாம்பாள் என்ற மூதாட்டி தனது காட்டில் விளைவித்த கம்பு பயிரினை பார்ப்பதற்கும், குருவி ஓட்டுவதற்கும் நேற்று மாலை சென்றுள்ளார். இந்த நிலையில் வீடு திரும்பாத விருந்தாம் பாள் மூதாட்டியை அவரது ஐந்து மகள்களும் அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காத மூதாட்டி அவரது…

Read More
மன ரீதியாக எல்லாத்திற்க்கும் தயாராகிவிட்டோம் : தஞ்சை தாயின் மகன் கண்ணீர் பேட்டி

மன ரீதியாக எல்லாத்திற்க்கும் தயாராகிவிட்டோம் : தஞ்சை தாயின் மகன் கண்ணீர் பேட்டி

மன ரீதியாக எல்லாத்திற்க்கும் தயாராகிவிட்டோம் என நேபாளத்தில் மாயமான தஞ்சாவூர் பெண்மணியின் மகன் கண்ணீருடன் தெரிவித்தார். நேபாள நாட்டில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி உள்ள 36 பேரின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. இதில் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த 16 பேரும் உள்ளனர். இதேபோல் தஞ்சாவூர் களிமேடு பகுதியை சேர்ந்த அன்பழகி சுற்றுலா சென்றுள்ளார். இதுவரை அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் அவரது மகன் அருள்மொழி மற்றும் குடும்பத்தினருடன் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இது…

Read More