Headlines

காவலுக்கு சென்ற மூதாட்டி அடித்து கொலை : கள்ளக்குறிச்சி அருகே துணிகரம்

காவலுக்கு சென்ற மூதாட்டி அடித்து கொலை : கள்ளக்குறிச்சி அருகே துணிகரம்

கள்ளக்குறிச்சி அருகே
கம்பு காட்டிற்கு காவலுக்கு சென்ற மூதாட்டியை அடித்து கொலை நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அருகே மலைக்கோட்டாலம் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமியின் மனைவி விருதாம்பாள் என்ற மூதாட்டி தனது காட்டில் விளைவித்த கம்பு பயிரினை பார்ப்பதற்கும், குருவி ஓட்டுவதற்கும் நேற்று மாலை சென்றுள்ளார்.

இந்த நிலையில் வீடு திரும்பாத விருந்தாம் பாள் மூதாட்டியை அவரது ஐந்து மகள்களும் அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர். எங்கு தேடியும் கிடைக்காத மூதாட்டி அவரது கம்பு காட்டிலே கிடந்துள்ளார்.

அப்போது பக்கத்துக் காட்டினர் இன்று காலை மூதாட்டி விருத்தாம்பாளை தலையில் பலத்த காயத்துடன் இறந்த நிலையில் பார்த்துள்ளனர்.

அப்போது மூதாட்டி அணிந்திருந்த தாலி, செயின், கொலுசு, மூக்குத்தி உள்ளிட்ட நகைகள் திருடு போயிருந்தன.

நகைக்காக மூதாட்டியை கொடூரமாக தாக்கி கொலை செய்து விட்டு மர்ம நபர்கள் நகையை திருடி சென்று இருக்கலாம் கூறப்படுகிறது.

இதுகுறித்து வரஞ்சரம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் மூதாட்டியை கொலை செய்த மர்ம நபர்கள் நகைக்காகத்தான் கொலை செய்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காட்டுக்குச் சென்ற மூதாட்டியை நகைக்காக கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *