Headlines
மாநகராட்சி மூலம் சம்பளம் வழங்க கோரி சங்கராபுரம் துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

மாநகராட்சி மூலம் சம்பளம் வழங்க கோரி சங்கராபுரம் துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியுடன் சங்கராபுரம் ஊராட்சி இணைக்கப்பட்ட நிலையில்,தனியார் ஒப்பந்ததாரர் மூலம் சம்பளம் வழங்கப்பட்டு வருவதாக கூறி,நேரடியாக மாநகராட்சி நிர்வாகத்தின் மூலம் சம்பளம் வழங்க வேண்டும் என்றும், பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் கோரி, துப்புரவு பணியாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கராபுரம் ஊராட்சி மன்ற அலுவலகம் வாயிலில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பங்கேற்றனர்.

Read More
ராணுவத்தால் அழிந்தவர்களை விட ஆணவத்தால் அழிந்தவர்களே அதிகம் : முன்னாள் அமைச்சர் சேகர்பாபு பதிலடி

ராணுவத்தால் அழிந்தவர்களை விட ஆணவத்தால் அழிந்தவர்களே அதிகம் : முன்னாள் அமைச்சர் சேகர்பாபு பதிலடி

சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்பதற்காக தலைமைச் செயலகத்திற்கு வந்த முன்னாள் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் திமுக சட்டமன்ற உறுப்பினருமான சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், செப்டம்பர் 17ஆம் தேதி 6000 ஆண்டுகளுக்கு மேல் வரலாற்று சிறப்புமிக்க அங்கயற்கரசி என்று போற்றப்படும் மீனாட்சி அம்மன் திருக்கோவில் குடமுழுக்கு நடைபெற உள்ளது. இந்த குடமுழுக்கு தேதியை நிர்ணயித்த அரசு திமுக அரசு. நேற்று 79 கல் தூண்கள் வீர வசந்தராயர் மண்டபம் 8 ஆண்டுகளுக்கு பிறகு கிழக்கு…

Read More
காரைக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு : கவுன்சிலர்கள்வாக்குவாதம்

காரைக்குடி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு : கவுன்சிலர்கள்வாக்குவாதம்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியில் இன்று சாதாரண, மற்றும் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதில் சாதாரண கூட்டத்தில் புதிய பேருந்து நிலையம் இருசக்ர வாகன தினசரி கட்டண வசூல் ஒப்பந்தமும், அவசரக் கூடத்தில் மூன்று சாலை பணிகளின் ஒப்பந்தகளை நிறுத்தி வைக்க கோரி அனைத்து உறுப்பினர்களும் கூட்டம் தொடங்கும் முன்பு பொறுப்பு மேயர், அதிகாரிகளிடத்தில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று ஒப்பந்த புள்ளிகளை நிறுத்தி வைப்பதாக பொறுப்பு மேயர் குணசேகரன் அறிவித்தார். இதனால் கூட்டத்தில்…

Read More
மலம்புழா அணையில் நீந்தி வந்த காட்டு யானை : மிரண்ட சுற்றுலாப் பயணிகள்

மலம்புழா அணையில் நீந்தி வந்த காட்டு யானை : மிரண்ட சுற்றுலாப் பயணிகள்

மலம்புழா நீர்த்தேக்கப் பகுதியில் திடீரென காட்டு யானை ஒன்று வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து கொண்டிருந்த காலை நேரத்தில், நீர்த்தேக்கத்தை ஒட்டி காட்டு யானை முகாமிட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. மலம்புழா அணை மற்றும் நீர்த்தேக்கப் பகுதிக்கு அருகே உள்ள ஆனக்கல் பகுதியிலிருந்து நீர்த்தேக்கத்தை கடந்து வந்த காட்டு யானை, தெக்கே மலம்புழா பகுதியில் வந்து சேர்ந்தது. கம்பீரமாக நடந்து வந்த காட்டு ஆண் யானை, நீர்த்தேக்கப் பகுதியில் சிறிது நேரம்…

Read More
கையும்,களவுமாக பிடிபட்ட முகமூடி கொள்ளையன் : சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கையும்,களவுமாக பிடிபட்ட முகமூடி கொள்ளையன் : சிசிடிவி காட்சிகள் வெளியீடு

திமிரி அருகே பூட்டிய வீட்டில் முகமூடி அணிந்து கொள்ளையடிக்க முயன்ற இளைஞர் கையும் களவுமாக பிடிபட்டார்.முகமூடி மற்றும் கையுறை அணிந்து கொள்ளையடிக்க வந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த வரகூர்பட்டி கொள்ளைமேடு பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி, 74. விவசாயியான இவர், நேற்று மாலை குடியாத்தம் பகுதியில் நடைபெற்ற உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். இதனிடையே, இரவு சுமார் 10 மணியளவில் மாசிலாமணி வீட்டில் இருந்து சத்தம் கேட்டதாக அக்கம்பக்கத்தினர் அவருக்கு…

Read More
தண்ணீ்ர் தொட்டிகளில் வீசப்பட்ட பெண் சடலம் : சேலத்தில் கொடூரம்

தண்ணீ்ர் தொட்டிகளில் வீசப்பட்ட பெண் சடலம் : சேலத்தில் கொடூரம்

சேலத்தில் அடுத்தடுத்த வீடுகளின் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் பெண் ஒருவரை துண்டு, துண்டாக வெட்டி, மூட்டைகள் கட்டி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம், அரிசிபாளையம் குணபல ராமசாமி தெருவில் சவுண்டம்மன் கோவில் பூசாரி ரமேஷ் என்பவர் கோவிலுக்கு சொந்தமான வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.இவரது வீட்டின் மாடியில் உள்ள அறையின் மேல் தலா ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு சின்டெக்ஸ் தொட்டிகள் உள்ளன. நேற்றைய தினம் ரமேஷுக்கு திருமண நாள் என்பதால்…

Read More
கேரள விபத்து, தூக்கி விசப்பட்ட பெண்கள் : பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

கேரள விபத்து, தூக்கி விசப்பட்ட பெண்கள் : பரபரப்பு சிசிடிவி காட்சிகள்

கேரள மாநிலம் மலப்புரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது கார் மோதிய விபத்தில் தாய் மகள் இருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட எடப்பாள் மானூர் பகுதியைச் சேர்ந்த சிந்து (48) மற்றும் அவரது மகள் லட்சுமி (26) இருவரும் திருச்சூர் – குட்டிப்புரம் மாநில நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் பயணித்த போது எதிரே வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின்…

Read More
ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீச்சு : காவல்நிலையம் எதிரே பயங்கரம்

ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீச்சு : காவல்நிலையம் எதிரே பயங்கரம்

விழுப்புரத்தில்சாப்பிட்ட உணவிற்கு காசு கேட்ட முன் விரோதம் காரணமாக மூடிய ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் விழுப்புரம் தாலுக்கா காவல் நிலையம் எதிரில் தனியார் ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டல் நேற்று விடுமுறை விட்டதால் மூடப்பட்டு இருந்தது. இந்நிலையில் தாமரைக் குளம் பகுதியை சேர்ந்த தனுஷ் உள்ளிட்ட இளைஞர்கள் அந்த ஹோட்டல் மீது பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர்.அதனை அந்த இளைஞர்கள் செல்போனில் வீடியோ எடுத்து…

Read More
அமைச்சர் பதவியை துறப்போம் : காங்கிரஸ் அமைச்சர் சபதம்

அமைச்சர் பதவியை துறப்போம் : காங்கிரஸ் அமைச்சர் சபதம்

2029 ல் பாரத பிரதமர் ராகுல்காந்திதான் அதில் ஏதேனும் மாற்றம் உண்டு என தமிழக வெற்றிக்கழகம் கூறினால் தவெக அமைச்சரவையில் இருக்கும் இரண்டு காங்கிரஸ் அமைச்சர்களும் தங்களது பொறுப்புகளை துறப்போம் என குமரி மாவட்டம் வெட்டுமணியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் குமரி மேற்கு மாவட்ட தலைவர் பதவி ஏற்பு விழாவில் தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் சபதம் ஏற்றார். காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவராக மாணிக்கம்தாகூர் பொறுப்பேற்ற நிலையில் குமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர்களை…

Read More
சட்டமன்ற நேரத்தை வீண்டிக்கின்றனர் : எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு

சட்டமன்ற நேரத்தை வீண்டிக்கின்றனர் : எடப்பாடி பழனிசாமி குற்றசாட்டு

தமிழக சட்டமன்றத்தில் மக்கள் பிரச்சனையை பேச முன்னுரிமை கொடுக்காமல் சட்டமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடுக்கிறார்கள். மானிய கோரிக்கையில் எல்லா துறையின் கேள்விகளுக்கும் மூன்று அமைச்சர்களே பதில் அளிக்கிறார்கள். தமிழகத்தில் சர்க்கரை.அரிசி,பருப்பு எண்ணெய் விலை உயர்ந்துவிட்டது என அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு தெரிவித்தார். வேலூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்த அ.தி.மு.க கட்சி பொது செயலாளர் மற்றும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில் , சினிமாவில் எப்படி சட்டமன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறதோ…

Read More