கஞ்சா கடத்திய 6 பேர் கைது :68 கிலோ கஞ்சா, 3 சொகுசு கார்கள் பறிமுதல்
சேலத்தில் கார்களில் கடத்தப்பட்ட 68 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், கடத்தலில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்தனர். சேலம் மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் காவல் துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில் போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க தீவிர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். சேலம் காரிப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட அக்ரகார நாட்டாமங்கலம் பகுதியில் கேட்பாரற்று கிடந்த இரண்டு கிலோ கஞ்சாவை கைப்பற்றிய காரிப்பட்டி காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்நிலையில்…
