Headlines

திருச்செந்தூர் : 50 அடிக்கு உள்வாங்கிய கடல் – சேதமடைந்த சிலைகளை அப்புறப்படுத்த கோரிக்கை

திருச்செந்தூர் : 50 அடிக்கு உள்வாங்கிய கடல் - சேதமடைந்த சிலைகளை அப்புறப்படுத்த கோரிக்கை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்புள்ள கடல் அவ்வப்போது உள்வாங்கியும், சீற்றத்துடனும் காணப்பட்டு வருகிறது. இன்று காலையில் கடல் சுமார் 50 அடி உள்வாங்கியது.

கடல்வாங்கியதால் பச்சை நிற பாசிப்படிந்த பாறைகள் அதிக அளவு வெளியே தெரிந்தன.
அந்த சமயத்தில் சுமார் ஒரு அடி உயரம் கொண்ட கருப்பசாமி சிலை காணப்பட்டது. அதை அங்கு நின்ற ஒருவர் எடுத்து பார்த்தபோது சிலை சேதடைந்து காணப்பட்டது. இதுபோல் ஏராளமான சிலைகள் கடற்கரையில் காணப்படுகிறது.
இந்த சிலைகளால் கடலில் நீராடும் பக்தர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். எனவே கடற்கரையில் கரை ஒதுங்கும் சிலைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்செந்தூர் : 50 அடிக்கு உள்வாங்கிய கடல் - சேதமடைந்த சிலைகளை அப்புறப்படுத்த கோரிக்கை

இதுகுறித்து கோவில் நிர்வாகத்திடம் கேட்டபோது, கடற்கரையில் ஒதுங்கும் சிலைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *