Headlines

தனி குடித்தனத்துக்குவற்புறுத்துவதும் துன்புறுத்தல் தான் : சென்னை உயர் நீதிமன்றம்

தனி குடித்தனத்துக்குவற்புறுத்துவதும் துன்புறுத்தல் தான் : சென்னை உயர் நீதிமன்றம்

ஒரே மகனாக இருக்கும் நிலையில், பெற்றோரை விடடுவிட்டு, தனிக்குடித்தனம் வரவேண்டும் என்று கணவரை, மனைவி வற்புறுத்துவது துன்புறுத்தலுக்கு சமம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

குடும்ப நல நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்த பெண்ணின் மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது. விசாரணையின் போது,

திருமணத்துக்கு முன்பே கணவர் தனது பெற்றோருக்கு ஒரே மகன் என்பதையும், அவர்களை கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு இருப்பதையும் மனைவி அறிந்திருந்தார்.

கணவன்-மனைவி உறவு பரஸ்பர புரிதல், விட்டுக்கொடுத்தல் மற்றும் அன்பின் அடிப்படையில் இருக்க வேண்டும்.ஒருவர் மற்றொருவரின் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு வாழ முடியாது.

அடிக்கடி சண்டையிட்டு பெற்றோர் வீட்டுக்குச் செல்வது, மனைவி எப்போது வேண்டுமானாலும் தன்னை விட்டுப் பிரிந்து செல்லக்கூடும் என்ற பாதுகாப்பற்ற உணர்வை கணவருக்கு ஏற்படுத்துகிறார். என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *