தோட்டத்திற்கு வந்த அரியவகை நட்சத்திர ஆமை: வனத்துறையிடம் ஒப்படைப்பு
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளியில் வீட்டு தோட்டத்தில் நடமாடிய அரியவகை நட்சத்திர ஆமையை வீட்டின் உரிமையாளர் பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மாரண்டஅள்ளி பாலசுப்பிரமணியம் தெருவைச் சேர்ந்தவர் ராமன். இவர் நேற்று தனது வீட்டு தோட்டத்தில் செடிகளை கவனித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ஏதோ ஒன்று மெதுவாக ஊர்ந்து செல்வதை கண்டார். அருகில் சென்று பார்த்தபோது, முதுகில் அழகான நட்சத்திர வடிவ கோடுகளுடன் கூடிய ஆமை ஒன்று இருப்பது தெரியவந்தது. இது சாதாரண ஆமை அல்ல, அரியவகை நட்சத்திர ஆமை…
