Headlines
லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - அரூரில் பரபரப்பு

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை – அரூரில் பரபரப்பு

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் திடீர் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை காவல் கண்காணிப்பாளர் நாகராஜ் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர் பெருமாள் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறையினர் தற்போது அரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வட்டாட்சியர் அலுவலகத்தை பூட்டிவிட்டு, அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள், வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள், வட்டாட்சியர் பயன்படுத்தும் வாகனம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனை…

Read More
ஏடிஎம்களை உடைத்து கொள்ளை : கும்மிடிபூண்டியில் துணிகரம்

ஏடிஎம்களை உடைத்து கொள்ளை : கும்மிடிபூண்டியில் துணிகரம்

கும்மிடிபூண்டி அருகே அடுத்தடுத்து இரண்டு ஏடிஎம்களை உடைத்து பல லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏறப்டுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த மா.பொ.சி.நகர் பைபாஸ் சாலையில் ஆக்ஸிஸ் மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் ஆகிய இரு வேறு வங்கி ஏடிஎம்மில் புகுந்த மர்ம நபர்கள் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ஏடிஎம்மில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆக்சிஸ் வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் கடந்த 25ஆம் தேதி 12 லட்சம்…

Read More
சேலத்தில் போதை மாத்திரை சப்ளை : மருந்துக்கடை உரிமையாளர் உட்பட 2 பேர் கைது

சேலத்தில் போதை மாத்திரை சப்ளை : மருந்துக்கடை உரிமையாளர் உட்பட 2 பேர் கைது

சேலம் மாநகரில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் இளைஞர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த 40-க்கும் மேற்பட்டோரை கடந்த ஒரு மாதத்தில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.அவர்களிடமிருந்து 40,000 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் போதை மாத்திரை விற்பனையை காவல்துறையினரால் கட்டுப்படுத்த இயலவில்லை. இந்நிலையில் சேலம் மாநகரில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வந்தது. காவல் உதவி ஆய்வாளர்கள் தமிழ்வாணன் மற்றும் நவநீதகுமார் ஆகியோர் தலைமையில் விசாரணை நடத்தி வந்த தனிப்படை போலீசாருக்கு…

Read More
முதிய தம்பதியர் வீட்டில் நகை திருட்டு :சிசிடிவியால் வெளியான உண்மை

முதிய தம்பதியர் வீட்டில் நகை திருட்டு :சிசிடிவியால் வெளியான உண்மை

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை அடுத்த ஆறுமுகநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுப்பையா–கல்யாணி தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர் மகன் ரயில்வேயில் வேலை பார்த்து வருகிறார். மகள்கள் அனைவரும் பக்கத்து கிராமங்களுக்கு திருமணமாகி சென்றுள்ள நிலையில் வீட்டில் கல்யாணி சுப்பையா தம்பதிகள் மட்டும் இருந்துள்ளனர். இந்த நிலையில் திங்கள்கிழமை நள்ளிரவு காற்றுக்காக முதிய தம்பதிகள் இருவரும் கதவை திறந்து வைத்து படுத்துள்ளனர். அப்போது இரவு சுமார் 12 மணியளவில் மர்ம நபர் ஒருவர் சுவர்ஏறி குதித்து…

Read More
நேபாள வெள்ள பெருக்கு :பெற்றோரை உயிருடன் மீட்டு தர வேண்டும் அரசுக்கு மகன்கள் கோரிக்கை

நேபாள வெள்ள பெருக்கு :பெற்றோரை உயிருடன் மீட்டு தர வேண்டும் அரசுக்கு மகன்கள் கோரிக்கை

கும்பகோணத்தில் இருந்து கைலாயம் காண நேபாளத்திற்கு சென்ற 57 நபர்களில் 37 நபர்களின் நிலை தெரியாமல் உள்ளது. இதில் சுவாமிமலை வடக்கு வீதியை சேர்ந்த ராஜ்குமார் ( 61). அவரது மனைவி ஜெயந்தி (54) ஆகியோர் குறித்த விவரங்கள் கிடைக்காததால் அவர்களது மகன்கள் அச்சமடைத்துள்ளனர். நேற்று அங்கு ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் இவர்களது தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. தங்களது பெற்றோர் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றோம். இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை அரசு விரைவாக எனது பெற்றோரை…

Read More
பெட்ரோல் பங்கிற்குள் புகுந்து கவிழ்ந்த சுற்றுலா பேருந்து : அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள்

பெட்ரோல் பங்கிற்குள் புகுந்து கவிழ்ந்த சுற்றுலா பேருந்து : அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள்

கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் திருமண நிகழ்வில் பங்கேற்க சென்றவர்கள் வந்த சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.முன்னால் சென்ற இருசக்கர வாகனம் மீது மோதாமல் இருக்க பேருந்து ஓட்டுநர் திடீரென பேருந்தை திருப்பியதாக கூறப்படுகிறது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் இருந்த பெட்ரோல் பங்க் விளம்பர பலகைத் தூண் மீது மோதி கவிழ்ந்தது.இந்த விபத்தில் காயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தபோது…

Read More
கொலை மிரட்டல் விடுக்கின்றனர், அவப்பெயர் ஏற்படுத்துகின்றனர் - தவெக நிர்வாகிகள் மாறி மாறி புகார்.

கொலை மிரட்டல் விடுக்கின்றனர், அவப்பெயர் ஏற்படுத்துகின்றனர் – தவெக நிர்வாகிகள் மாறி மாறி புகார்.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட ரூ. 2 கோடி செலவு செய்ய வேண்டும், என்னைக் கேட்காமல் ஏன் எம்எல்ஏ வை பார்க்கச் செல்கிறாய், அனைவரையும் ஏணி போல் தூக்கிவிட்டு நான் வேடிக்கை பார்ப்பதா என தவெக திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஜி.கே‌.சங்கர் , ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியனிடம் பேசிய ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இரண்டு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தமிழக வெற்றி கழகத்தின் திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆக ஜி…

Read More
கியிரோங் செல்ல அனுமதிக்க வேண்டும்:நேபாள அரசுக்கு ஜக்கி வாசுதேவ்

கியிரோங் செல்ல அனுமதிக்க வேண்டும்:நேபாள அரசுக்கு ஜக்கி வாசுதேவ்

நேபாளத்தின் ராசுவா மாவட்டத்தில் உள்ள போதேகோசி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை கைலாஷ் யாத்திரை சென்றவர்கள் உட்பட 157 பேர் உயிரிழந்துள்ளனர். காணாமல் போன ஆயிரக்கணக்கானோரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஈஷா அறக்கட்டளை சார்பில் யாத்திரை சென்றவர்களில் 80 பேரின் நிலை என்னவென்று இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. இந்நிலையில் தன்னையும் சில தன்னார்வலர்களையும் கியிரோங் செல்ல அனுமதிக்க வேண்டுமென நேபாள அரசுக்கு ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கடிதம் எழுதியுள்ளார்….

Read More
30 அடி கிணற்றில் விழுந்த மூதாட்டி : துரிதமாக மீட்ட தீயணைப்பு துறையினர்

30 அடி கிணற்றில் விழுந்த மூதாட்டி : துரிதமாக மீட்ட தீயணைப்பு துறையினர்

30 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த மூதாட்டியை துரிதமாக செயல்பட்டு சுரண்டை தீயணைப்பு துறையினர் மீட்ட சம்பவம் பாராட்டை பெற்றுள்ளது. தென்காசி மாவட்டம், துவரங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட பஞ்சாயத்து தெருவைச் சேர்ந்த மாடசாமி என்பவரது மனைவி உடையம்மாள் (வயது 65). இவர் எதிர்பாராதவிதமாக இன்று அதிகாலையில் அப்பகுதியில் உள்ள சுமார் 30 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், உடனடியாக சுரண்டை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையத்திற்குத் தகவல்…

Read More
நேபாள வெள்ளப்பெருக்கு : காஞ்சிபுரம் சுற்றுலாப்பயணிகளின் நிலை என்ன?

நேபாள வெள்ளப்பெருக்கு : காஞ்சிபுரம் சுற்றுலாப்பயணிகளின் நிலை என்ன?

நேபாள வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் காஞ்சிபுரத்தை சேர்ந்த சுற்றுலாப்பயணிகளின் தற்போதைய சூழல் குறித்து தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என அவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த 6 பேர், குரோம்பேட்டை மகாதேவி யாத்ரா நிறுவனம் மூலம் கடந்த 14ஆம் தேதி 14 நாட்கள் ஆன்மீக சுற்றுலாவாக நேபாளம் சென்றுள்ளனர். இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சுற்றுலா வாகனங்கள் அடித்துச் செல்லப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளதால், அங்கு சென்றுள்ள 6 பேரின் நிலை குறித்து அவர்களது…

Read More