Headlines

விபத்தை தவிர்க்க முயன்று குப்புற கவிழ்ந்த கார் : உயிர்தப்பிய இருவர்

விபத்தை தவிர்க்க முயன்று குப்புற கவிழ்ந்த கார் : உயிர்தப்பிய இருவர்

ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில், சென்ற கார் மீது மோதாமல் இருக்க காரை திருப்பிய போது, கட்டுப்பாட்டை இழந்த கார் 20 அடி தூரம் தள்ளி சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

சென்னை திருவெற்றியூர் பகுதியை சேர்ந்த ரூபேஷ் மற்றும் கிஷோர்குமார் ஆகியோர் ஓசூருக்கு, சென்று வீட்டு மீண்டும் கார் மூலம் சென்னை திரும்பியுள்ளனர். அப்போது காரை ரூபேஷ் ஓட்டி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று கார் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் உள்ள சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்துக்கொண்டிருந்த போது, மற்றொரு கார் மீது மோதாமல் இருக்க காரை திருப்பிய போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் இருந்த கம்பியில் மோதி, சுமார் 20 அடி தூரம் தள்ளி சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் காரில் பயணம் செய்த ரூபேஷ் மற்றும் கிஷோர்குமார், சிறுகாயங்களுடன் உயிர்தப்பினர், உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக, 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,

மேலும் இந்த விபத்து குறித்து, ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வரும் நிலையில்,
கார் மீது மோதாமல் இருக்க காரை திருப்பிய போது, கட்டுப்பாட்டை இழந்த கார், 20 அடி தூரம் தள்ளி சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *