அண்டை மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது தமிழகத்தில் மின்வெட்டு குறைவாக உள்ளது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோட்டில் கியா நிறுவனத்தின் புதிய காரை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
மேலை நாடுகளுக்கு சென்று தொழில் முதலீட்டாளர்களை அழைத்து பல்வேறு தொழில்களை தமிழ்நாட்டில் தொடங்கும் நோக்கத்துடன் பயணம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. குறிப்பாக தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒரு தூய்மையான ஆட்சி மக்களுக்கு விரைந்து பணிகளை ஆற்றிட ஒவ்வொரு துறையும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தோடு நம்முடைய முதலமைச்சர் அந்தப் பணிகளை ஒவ்வொரு துறை வாரியாக ஆய்வுகளை மேற்கொண்டு பணிகளை மேற்கொண்டு வருகிறார் .
இன்றைக்கு சட்டமன்ற கூட்டத்தை மக்கள் காலையில் 9:30 மணியிலிருந்து கூட்டம் முடியும் வரை அத்தனை பேரும் கண்டுக்களிக்கின்ற நிகழ்ச்சியாக வேறு நிகழ்ச்சியை காணாமல் அதை காணுகின்ற நிலை தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது .
அது மட்டுமல்ல இன்று தமிழ்நாட்டில் இருந்து அவர் மேலை நாடுகளுக்கு செல்கின்ற போது அந்த விமானம் எங்கே வருகின்றது என்பதை பார்ப்பவர்களின் எண்ணிக்கை இந்தியாவில், உலக அளவில் முதல்வருக்கு அதிகாம உள்ளது. அவர் எந்த விமானத்தில் எத்தனை மணிக்கு வருகிறார் என்பதை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள விரும்புகின்றனர் என புள்ளி விவரம் சொல்கிறது.
தாராபுரம் இடைத்தேர்தலுக்கு 16ம் தேதி தவெக வேட்பாளர் மனு தாக்கல் செய்வார். இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்கு முதல்வர் வருவாரா என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என்றார். இடைத்தேர்தல் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
அரசை பொறுத்தவரை ஆட்சியில் அமர்ந்தவுடன் விமர்சனத்தை தாங்கிக் கொள்கிற சக்தி எங்களுக்கு உள்ளது .அதே நேரத்தில் அது நேர்மையாக இருக்க வேண்டும். விமர்சனம் செய்வது என்பது வேறு மக்கள் பணிக்காக சொல்வது வேறு.
பரந்தூரில் இரண்டு நீர் நிலைகள் இருக்கிறது. நஞ்சை நிலங்கள் இருக்கிறது அங்கே ஒரு லேக் உள்ளது .விமான நிலையத்திற்கு தேவை என்பது வேறு .சிப்காட்டிற்கு தேவை என்பது வேறு .இதனை புரிந்து கொள்ள வேண்டும் .ஏனென்று சொன்னால் விமானத்திற்கு ரன்வே வேண்டும். ரன்வே லேக்கில் அமைக்க முடியாது. பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று போராட்டங்களை ஏற்று தேர்தலுக்கு முன்னால் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறார்.
மின் வெட்டை குறைப்பதற்காக முதல்வர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் .இப்போது நேற்றைய தினம் டவர்கெட் குறைந்துள்ளது .காற்றாலை மின்சாரம் மொத்தமாக முடங்கியுள்ளது 50 மெகாவாட் கூட கிடைப்பதில்லை . நேற்றைய முன் தினம் நேற்று ஓரளவுக்கு மின்வெட்டு என்பது குறைக்கப்பட்டுள்ளது .
அண்டை மாநிலங்களை ஒப்பிட்டு பார்க்கும்போது தமிழகத்தில் மின்வெட்டு குறைவாக உள்ளது .வேறு மாநிலத்தில் 8 மணி நேரம் 9 மணி நேரம் மின்வெட்டு உள்ளது அந்த நிலை தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது என்பதுதான் முதல்வரின் எண்ணம் அதற்கான பணிகளை விரைந்து மேற்கொண்டு வருகிறோம்.சோலார் பேனல் இதில் மின்சாரத்தை எடுக்கிறோம். பகல் நேரங்களில் மட்டும் தான் உபயோகப்படுத்த முடிகிறது . இரவு நேரங்களில் சூரிய வெப்பம் இல்லாத காரணத்தினால் மின் உற்பத்தி இல்லை ஆனால் அதை எப்படி சேமித்து வைக்கலாம் என்பதை சிந்தித்து இரண்டு நாட்களுக்கு முன்பாக அனைத்து துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார் .
எங்கெங்கு துணை மின் நிலையம் உள்ளது அதிலே மின்சாரத்தை சேமித்து வைப்பதற்கு எவ்வளவு இடம் தேவை என்ற புள்ளிவிவரம் கேட்கப்பட்டுள்ளது எல்லாம் நன்றாக நடக்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
