டெல்லியில் 4 மாடி கட்டிடம் திடீரென சாய்ந்த்தால் குடியிருப்புவாசிகளை போலீசார் பத்திரமாக வெளியேற்றினர்.
டெல்லியின் ஷாதரா பகுதியில் உள்ள காந்தி நகரில் 4 மாடி கட்டிடம் ஒன்று திடீரென ஒரு பக்கமாக சாய்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலின்படி நேற்று காலை கட்டிடம் சாய்வதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து அலறியடித்து வெளியே ஓடினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் , பாதுகாப்பு கருதி கட்டிடத்தில் இருந்த அனைவரையும் உடனடியாக வெளியேற்றினர்.இதுவரை உயிர் சேதம் எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது. கட்டிடம் எதனால் சாய்ந்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் அசம்பாவிதம் ஏற்படாமல் தடுக்க அந்த பகுதிக்கு
தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது.
