மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில மாநாட்டில் பேசிக்கொண்டிருந்த போது மின்தடை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்மிடிப்பூண்டியில் நடைபெற்று வரும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 31-வது மாநில மாநாட்டில் கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது.
இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் சிறப்புரையாற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்தடை ஏற்பட்டது.
இதையடுத்து, ஜெனரேட்டர் மூலம் மின்சாரம் வழங்கப்பட்டது. சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு மின்சாரம் மீண்டும் வந்தது.
இதைத்தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தனது சிறப்புரையை ஆற்றினார்.
தமிழகத்தில் தொடர் மின்வெட்டை கண்டித்து பல்வேறு பகுதிகளில் மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டு மக்கள் போராடி வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது மின்தடை ஏற்பட்டது. இதனால் அவர் செல்போன் வெளிச்சத்தில் பேட்டியளித்தார். இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பேசும் போது மின் தடை ஏற்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.
