Headlines
தாராபுரம் இடைத்தேர்தல் : தவெக வேட்பாளர் சத்தியபாமா மனுத்தாக்கல்

தாராபுரம் இடைத்தேர்தல் : தவெக வேட்பாளர் சத்தியபாமா மனுத்தாக்கல்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில்ப அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் இறுதி நாளான இன்று, தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் சத்தியபாமா பொன்னுசாமி தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். வேட்புமனுதாக்கல் நிகழ்வில் தவெகபொதுச் செயலாளரும், அமைச்சருமான ஆனந்த், அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண்ராஜ், விஜய் பாலாஜி, லோகேஷ் தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில்,தமிழ்நாடு முதலமைச்சரின் வெற்றி வேட்பாளர் சத்தியபாமா.வெற்றி வாகை சூட சத்தியபாமா…

Read More
தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் : காங்கிரஸ் வேட்பாளர் மனுதாக்கல்

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல் : காங்கிரஸ் வேட்பாளர் மனுதாக்கல்

புதுச்சேரி மாநிலம் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் விநாயகம் மனுதாக்கல் செய்தார். புதுச்சேரி தட்டாஞ்சாவடி பொது தேர்தலில், கடந்த முறை த.வெ.க., கூட்டணியில், நேயம் மக்கள் கழகம் சார்பில், அதன் பொதுச்செயலாளர் விநாயகம் போட்டியிட்டு இரண்டாம் இடம் பிடித்தார். அவர் மீண்டும் தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிட நேயம் மக்கம் கழக தலைவர் நேரு எம்.எல்.ஏ., முயற்சி மேற்கொண்டு, த.வெ.க., கூட்டணியில் தற்போதுள்ள அனைத்து கட்சிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்,…

Read More
ஊர்க்காவலனுக்கு பிரியாவிடை அளித்த பொதுமக்கள்

ஊர்க்காவலனுக்கு பிரியாவிடை அளித்த பொதுமக்கள்

செல்லப்பிராணியாக மட்டுமல்லாமல், ஒரு ஊரின் அங்கமாகவும், அந்தப் பகுதி மக்களின் பாதுகாவலனாகவும் கடந்த 16 ஆண்டுகளாக வாழ்ந்த ‘சோனி’ என்ற நாய்க்கு, பட்டனூர் பகுதி மக்கள் கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்துள்ளனர். கண்ணூர் மாவட்டம் பட்டனூர் பகுதியில் பல ஆண்டுகளாக சுற்றித் திரிந்த சோனி, அப்பகுதி மக்களுக்கு மிகவும் பரிச்சயமான நாயாக இருந்துள்ளது. காலப்போக்கில் அந்தப் பகுதி மக்களுடன் நெருக்கமாகப் பழகிய சோனி, ஒரு வீட்டின் செல்லப்பிராணி என்ற எல்லையைத் தாண்டி, முழு ஊருக்கும் சொந்தமான நாயாக…

Read More
காய்ச்சல் பாதிப்புகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள்-அமைச்சர் அருண்ராஜ்

காய்ச்சல் பாதிப்புகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள்-அமைச்சர் அருண்ராஜ்

சென்னையில்ல செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் கூறியதாவது,தமிழகத்தில் தற்போது, சுவாசத்தொற்று பரவல் அதிகமாக உள்ளது. அரசு தடுப்பு நடவடிக்கை எடுத்து வருகிறது; பொதுமக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காய்ச்சல் போன்ற பாதிப்புகள் இருந்தால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாதீர்கள்.பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும். டெங்கு காய்ச்சல் பரவலும் உள்ளது; இந்த ஆண்டில் இதுவரை, தமிழகத்தில் டெங்கு காய்ச்ச லால், 15,933 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர்.அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்குவுக்கு முறையான…

Read More
500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் : ரயில்வே பாதுகாப்புப் படை அதிரடி

500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் : ரயில்வே பாதுகாப்புப் படை அதிரடி

கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் கேரளாவுக்கு செல்லும் ரயில்களில் இருந்த 500 கிலோ ரேஷன் அரிசியை ரயில்வே பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு ரயில்கள் மூலம் பொது விநியோகத் திட்டத்தின் ரேஷன் அரிசி சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படுவதைத் தடுக்கும் வகையில், கோவை ரயில்வே பாதுகாப்புப் படை உதவி பாதுகாப்பு ஆணையர் சந்திர மோகன் உத்தரவின் பேரில், போத்தனூர் ரயில் நிலையத்தில் சிறப்பு சோதனை நடைபெற்றது. போத்தனூர் RPF ஆய்வாளர் மணிகண்டன் தலைமையிலான ரயில்வே…

Read More
வீட்டிற்குள் புகுந்த காட்டு பன்றி – முதியவரை முட்டித் தாக்கிய அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

வீட்டிற்குள் புகுந்த காட்டு பன்றி – முதியவரை முட்டித் தாக்கிய அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரசேரி பகுதியில் வீட்டிற்குள் புகுந்த காட்டு பன்றி, வராண்டாவில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த முதியவரை திடீரென முட்டித் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டின் வராண்டாவில் முதியவர் செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த காட்டு பன்றி, அவரை நோக்கி வேகமாகச் சென்று முட்டியது. இதில் எதிர்பாராத தாக்குதலால் முதியவர் நிலைகுலைந்தார். இந்த சம்பவம் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி…

Read More
எம்எல்ஏக்களின் ராஜினாமா கேலி கூத்தானது- சென்னை உயர்நீதிமன்றம்

எம்எல்ஏக்களின் ராஜினாமா கேலி கூத்தானது- சென்னை உயர்நீதிமன்றம்

மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடையில்லை எனக்கூறி வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு தேர்தல் ஆணையம் இடைத்தேர்தல் அறிவித்தது. இரு தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி தொடங்கியது. இன்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைகிறது. இந்த 2 தொகுதிகளிலும் அதிமுக சார்பில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆகி ராஜினாமா செய்தவர்கள் தற்போது தவெக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். தேர்தல் முடிவுகள் வெளியான…

Read More
அன்பில் மகேஸ் இல்லத்தில் சோதனை - மு.க.ஸ்டாலின் கண்டனம்

அன்பில் மகேஸ் இல்லத்தில் சோதனை – மு.க.ஸ்டாலின் கண்டனம்

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்தி வரும் சோதனைக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது,தவெக அரசின் மற்றுமொரு திசைதிருப்பும், அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல் லண்டனில் முதலமைச்சர் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்கிறார். மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் மீது ரெய்டு அஸ்திரத்தை த.வெ.க. அரசு ஏவியுள்ளது .இந்த அப்பட்டமான அரசியல்…

Read More
முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை

கடந்த திமுக ஆட்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்தவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. திருவெறும்பூர் தொகுதியில் இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவருக்கு பள்ளிக்கல்வித் துறை பொறுப்பு வழங்கப்பட்டது. நடந்து முடிந்த 2026 சட்டசபை தேர்தலில் தோல்வியைத் தழுவினார் அவர். இந்த நிலையில் இன்று முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் இல்லத்தில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதில் லஞ்சம் பெற்றதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு…

Read More
திருப்புவனத்தில் துணிகரம் : தலைமையாசிரியர் வீட்டில் 120 சவரன் நகை கொள்ளை

திருப்புவனத்தில் துணிகரம் : தலைமையாசிரியர் வீட்டில் 120 சவரன் நகை கொள்ளை

திருப்புவனத்தில் பூட்டியிருந்த அரசுப்பள்ளி தலைமையாசிரியரின் வீட்டில் புகுந்த மர்ம நபர்கள், 126 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.60 லட்சம் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில், இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், தடயங்களை சேகரிக்க கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்….

Read More