Headlines

அரசு பேருந்து மோதி முதியவர் உயிரிழப்பு : சாலையை கடந்தபோது விபரீதம்

அரசு பேருந்து மோதி முதியவர் உயிரிழப்பு : சாலையை கடந்தபோது விபரீதம்

சிங்கம்புணரியில் சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது
அரசு பஸ் மோதிய விபத்தில் அவர் சம்பவம் இடத்திலேயே உயிரிழந்தார்.
‎
‎சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி கூத்தாடி அம்மன் கோவில் தெருவை  சேர்ந்தவர் லட்சுமணன். 72.,
‎‎இவர் இன்று நண்பகல் சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் வளாகத்தில் இருந்து காரைக்குடி – திண்டுக்கல் சாலையை கடக்க முயன்ற பொழுது கோவை நோக்கி சென்ற பொன்னமராவதி பணிமனையைச் சேர்ந்த அரசு பேருந்து மோதியதில் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்
‎
‎பஸ்சை ஓட்டி வந்த ஓட்டுநர் தண்டபாணி சிங்கம்புணரி காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
‎‎சிங்கம்புணரி போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் இறந்த லட்சுமணன் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து சிங்கம்புணரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *