பிரதமர் நரேந்திர மோடியின் பள்ளி நண்பரான 81 வயதான அஸ்கர் அலி வோரா, பிரதமரைச் சந்தித்த சில நாட்களுக்குப் பிறகு, மகாராஷ்டிராவின் மீரா-பயந்தர் பகுதியில் பாஜக எம்.எல்.ஏ. நரேந்திர மேத்தாவிடமிருந்து தனது சர்ச்சைக்குரிய நிலத்தைத் திரும்பப் பெற்றார். அந்த நிலத்தின் உரிமையைத் துறப்பதாகவும், வோராவுக்கு எதிரான காவல் துறை புகாரைத் திரும்பப் பெறுவதாகவும் மேத்தா தெரிவித்துள்ளார்.
குஜராத்தின் வட்நகரில் உள்ள பி.என். பள்ளியில் பிரதமர் மோடியுடன் படித்தவர் அஸ்கர் அலி வோரா. இவர் மும்பையில் உள்ள பயந்தர் கிழக்கு, நவகரில் கடந்த 1989 ஆம் ஆண்டு சுமார் 2,810 சதுர மீட்டர் நிலத்தை வாங்கியுள்ளார்.அந்த நிலத்தை
போலி ஆவணங்கள் மூலம் பாஜக எம்.எல்.ஏ நரேந்திர மேத்தா ஆக்கிரமித்து நெருக்கடி தந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 8 ஆம் தேதி தனது நிலத்தை மீட்டுத்தருமாறு தனது பள்ளிக்கால நண்பரான பிரதமர் மோடியை சந்தித்து அஸ்கர் அலி வோரா உதவி கோரினார்.
இந்த சந்திப்பிற்கு சில நாட்களுக்கு பின் நிலம் அஸ்கர் அலி வோராவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதன்மூலம் 15 ஆண்டுகளாக நீடித்துவந்த நிலப் பிரச்னை, அடுத்த சில நாட்களிலேயே முடிவுக்கு வந்துள்ளது.
