Headlines

கன்னட நடிகர் ஆனந்த் நாக்கிற்கு தாதாசாகேப் பால்கே விருது

கன்னட நடிகர் ஆனந்த் நாக்கிற்கு தாதாசாகேப் பால்கே விருது

இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதிற்கு கன்னட சினிமாவின் பிரபல நடிகர் ஆனந்த் நாக் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

சாண்டல் வுட் எனப்படும் கன்னட சினிமா உலகின் பிரபல நடிகர் ஆனந்த் நாக். 50 ஆண்டுகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இன்றைய சினிமா ரசிகர்களுக்கு சொல்ல வேண்டும் என்றால் கேஜிஎப் 1 திரைப்படத்தில், ராக்கி பாயின் கதையை விவரிக்கும் கதாபாத்திரத்தில் நடித்தது இவர் தான். இவரது பவர்புல் பீப்புள், கம் ப்ரம் பவர்புல் பிளேசஸ் என்ற வசனத்தின் கம்பீரம் இவரது நடிப்பாற்றலுக்கு ஒரு பருக்கை பதம்.

கன்னடத்தில் 1973ல் சங்கல்பா திரைப்படத்தின் மூலம் நாக் தனது முதல் திரைப்படத்தில் அறிமுகமானார்.
தொடர்ந்து ஹம்சகீதே, சந்தனத கொம்பே, கணேஷனா மதுவே உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களில் நடித்தார்.

கன்னட சினிமா தாண்டி தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் நடித்துள்ளார். இவர் நடித்த 300 படங்களில் 250 படங்கள் கன்னட மொழி படங்களாகும்.

இந்நிலையில் 2024ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருதிற்கு இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 2025ல் இவருக்கு பத்ம்பூசண் விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனந்த் நாக் ஒரு அரசியல்
வாதியும் கூட. 1996-99 ஜே.ஹெச் படேல் தலைமையிலான ஜனதா தள அரசில் மாநில அமைச்சராக பணியாற்றிவர். கடந்த 2023 ல் இவர் பாஜகவில் இணைவதாக நிகழ்ச்சி் ஏற்பாடு செய்யப்பட்டு கைவிடப்பட்டது.

தாதாசாகேப் பால்கே விருதிற்கு தேர்வான ஆனந்த் நாக்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி, கர்நாடக மாநில முதல்வர் சிவக்குமார் உள்பட அரசியல், சினிமாத்துறையை சேர்ந்த பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *