தாராபுரம் அடுத்த குண்டடம் மேற்கு ஒன்றிய பகுதிகளில் த. வெ. க. வேட்பாளர் சத்தியபாமா நேற்று வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.
பெரியகுமாரபாளையம் பகுதியில் பிரச்சாரம் செய்த அவரிடம் அங்கிருந்த அதிமுக தொண்டர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
50கோடியை வாக்கிகொண்டு உங்களுக்காக கடுமையாக உழைத்த எங்களுக்கு துரோகம் செய்து விட்டு மீண்டும் ஓட்டுகேட்டு வந்துள்தை ஏற்கமுடியாது என்றும், தி. மு. க. வும் அ. தி. மு. க. வும் கூட்டு சேர்த்து ஆட்சி அமைக்க முயன்றதால் ராஜினாமா செய்தேன் என கூறிவரும் நீங்கள் அதற்கான ஆதாரத்தை இப்போதே காட்டுங்கள் என தெரிவித்தனர்.
த. வெ. க. தொண்டர்கள் போலீசார் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து சத்தியபாமாவிடம் கேள்வி எழுப்பிய சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதை தொடர்ந்து குண்டடம் போலீசார் வேட்பாளர் சத்தியபாமாவை அங்கிருந்து அடுத்த பகுதிக்கு பாதுகாப்பாக அழைத்து சென்றனர்.
