Headlines

ஒகேனக்கல் சின்னாறு பகுதியில் காட்டாற்று வெள்ளம் : பொதுமக்கள் மகிழ்ச்சி

ஒகேனக்கல் சின்னாறு பகுதியில் காட்டாற்று வெள்ளம் : பொதுமக்கள் மகிழ்ச்சி

தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த ஒகேனக்கல் சின்னாறு பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையின் காரணமாக மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

ஒகேனக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார வனப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால், சின்னாறு பகுதியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் காட்டாற்று வெள்ளம் போல் மழைநீர் கரைபுரண்டு ஓடுகிறது.

இப்பகுதியில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரை பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். தொடர் மழையால் வனப்பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் மற்றும் ஓடைகளில் நீர்வரத்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *