Headlines

குடியிருப்பு பகுதிக்கு அருகே கொட்டப்படும் குப்பைகள் : பொதுமக்கள் சாலை மறியல்

குடியிருப்பு பகுதிக்கு அருகே கொட்டப்படும் குப்பைகள் : பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பத்தூர் 36வது வார்டில் குப்பைகளை கொட்டி வரும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து சாலையில் கட்டைகளை வைத்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட 36-வது வார்டு பாவுசாநகர் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் மற்றும் ஆட்டு இறைச்சி கழிவுகள் கோழி இறைச்சி கழிவுகள் அனைத்தும் அதே பகுதியில் குடியிருப்புக்கு அருகாமையில் கொட்டப்படுவதாக கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

அப்பகுதியில் இருந்து குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என பலமுறை நகராட்சி ஆணையாளர் சாந்தி மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதிமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் இன்று திருப்பத்தூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் சாலையில் கட்டைகளை போட்டு வைத்து திடீரென சாலை மறியலில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் இது குறித்து தகவல் அறிந்து சமபவ இடத்திற்கு விரைந்து வந்த கிராமிய போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இது தொடர்பாக ஆணையாளரிடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததின் பேரில் சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதன் காரணமாக திருப்பத்தூரிலிருந்து கிருஷ்ணகிரி செல்லும் பிரதான சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *