சேலம் அம்மாபேட்டை பகுதியில் இயங்கி வந்த அன்னை தெரசா அறக்கட்டளை நிதி மோசடி விவகாரத்தில் ஜாமீனில் வெளியே வந்த பாஸ்டர் செந்தில்குமாரை பொதுமக்கள் ஜெபக்கூடத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
அன்னை தெரசா அறக்கட்டளையின் பெயரில் அதிக வட்டி மட்டும் இரட்டிப்பு லாபம் தருவதாக கூறி பொதுமக்களிடமிருந்து 3000 கோடி ரூபாய் வரை நிதி திரட்டி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
இந்த வழக்கில் தொடர்புடைய நபர்கள் ஏற்கனவே பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினால் கைது செய்யப்பட்டவர்கள்.
இந்நிலையில் இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த மத போதகர் செந்தில்குமார் நேற்று முன்தினம் அம்மாபேட்டை பகுதியில் உள்ள ஜெப கூட்டத்திற்கு வந்ததை அறிந்த பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திடீரென்று அவரை சூழ்ந்து கொண்டு முற்றுகையிட்டனர்.
முற்றுகையின்போது பாஸ்டர் செந்தில்குமார் அங்கிருந்து தப்பியோடியதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஜெபக்கூடத்தில் இருந்த இருந்த நாற்காலிகளை தூக்கி அடித்து உடைத்து தங்களது ஆவேசத்தை வெளிப்படுத்தினர்.
தங்களுக்கு சேர வேண்டிய பணத்தை விட்டு தரக்கோரி 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தொடர்ந்து ஜெப கூடத்தில் உள்ளே மூன்றாவது நாளாக உள்ளிருப்புபோராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அம்மாபேட்டை காவல்துறையினர் யார் யாருக்கு எவ்வளவு பணம் தர வேண்டும் என்ற விபரத்தை சேகரித்து வருகிறார்கள்.
இதுகுறித்து பாதிக்கப்படட பொதுமக்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அன்னை தெரசா அறக்கட்டளையில் பணம் செலுத்த இருப்பதாகவும் இதில் 5 லட்சம் 10 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் பணம் போட்டவர்கள் இருப்பதாகவும் 3000 கோடி வரை வசூலித்ததாகவும், அதில் 75 ஆயிரம் மக்கள் பணத்தை செலுத்தி இருப்பதாகவும் இதில் 40 பேர் மன உளைச்சலில் காரணமாக இறந்து விட்டதாகவும் கூறினர்.
நேற்று 40 லட்ச ரூபாய் செலுத்தியிருந்த பெண் இறந்து விட்டதாகவும், இதே போன்று பணம் போட்டவர்கள் பணம் கிடைக்கவில்லை நாம் மோசம் போய் விட்டோமோ என்று மன உளைச்சலில் இறந்து விட்டார்கள் என்று கூறினர்.
நாங்கள் பணத்தை போட்டுவிட்டு வீடு வாசல் அனைத்தையும் இழந்து விட்டு நிற்பதால் இந்த இடத்தை விட்டு நாங்கள் எங்கும் செல்ல முடியாது வெளியே போகச் சொன்னால் நாங்கள் தெருவிலே தான் நிற்க வேண்டியது வரும்.
நாங்கள் கட்டிய பணத்தை வைத்து இந்த இடத்தை வாங்கியதாகவும் இது எங்களுக்கு சொந்தம் என்றும் அதனால் நாங்கள் இங்கு தான் இருப்போம் என்றும் கூறினர்.
எங்களை புகார் கொடுக்க சொல்கிறார்கள் என்றும், புகார் கொடுத்து பணம் செட்டில்மெண்ட் ஆனால் மட்டுமே இந்த இடத்தை விட்டு வெளியே போகிறோம் என்றும் இல்லையென்றால் நாங்கள் வெளியே செல்ல மாட்டோம் இது எங்களிடம் நாங்கள் இங்குதான் இருப்போம் என்று கூறினார்.
எங்கள் பணத்திற்கு தீர்வு கிடைக்கும் வரை இந்த இடத்தை விட்டு நகர மாட்டோம் பணத்தை கொடுத்தால் நாங்கள் இடத்தை விட்டு போகிறோம் இங்கு இருப்பவர்கள் மட்டுமல்ல வெளியே இன்னும் பாதிக்கப்பட்ட மக்கள் இருக்கிறார்கள் அவர்களும் வருவார்கள்.
கேஸ் கொடுத்து விட்டோம் என்று சொல்கிறார்கள் எங்களுக்கு கேஸ் ஒரு தீர்வு அல்ல யார் வேண்டுமானாலும் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் ஆனால் எங்களுக்கு என்ன தீர்வு கிடைக்கப் போகிறது.
சேலம் மாவட்டத்தில் மட்டும் 75 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
சேலம், ஈரோடு, தர்மபுரி ,கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, கோவை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் யார் யார் எவ்வளவு பணம் செலுத்தி இருக்கிறார்கள் என்று எங்களுக்கு தெரியாது.
எங்களிடம் பணம் வாங்கும் போது ஆதார் அட்டையை வைத்து தான் பணம் வாங்கினார்கள். அந்த ஆதாரம் தான் எங்களிடம் இருக்கிறது. வேற எந்த ஆதாரமும் எங்களிடம் இல்லை. விஜய பானு, செந்தில்குமார், ஜான்சி ஆகியோரை கைது செய்தால் தான் இதற்கு நிவாரணம் கிடைக்கும் என்றார்.
காவல்துறை மற்றும் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் கொடுக்கும்போது நாங்கள் கொடுத்த புகாரை வாங்கவில்லை என்றும் கூறினார்.
ஒரு மாத காலம் ஆனாலும் சரி ஒரு வருடமே ஆனாலும் சரி பணத்தை வாங்காமல் இந்த இடத்தை விட்டுநகர மாட்டோம் என்று கூறினர்.
நேற்று 40 லட்சம் கட்டி இறந்த பெண்மணியின் புகைப்படம் இதுதான் என்றும் குற்றம் சாட்டினார். இந்த குடும்பத்திற்கு யார் பதில் சொல்வார்கள் அந்த குடும்பத்திற்கு யார் பணத்தை யார் வாங்கி தருவார்கள்.
என்று கேள்வி எழுப்பினர்.
