Headlines

குடும்பம் நடத்த வரமறுத்த மனைவியின் மூக்கை கடித்த கணவன் : மாமனாரும் காயம்

தெலுங்கானா மாநிலம் மஞ்சூரியால் மாவட்டம் கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மணி சந்தர். அவருடைய மனைவி மமதா. இரண்டு பேருக்கும் ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமண நடைபெற்று இரண்டு மகள்கள் உள்ளனர்.

மதுவுக்கு அடிமையான மணி சந்தர் மனைவியை வரதட்சணை கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மமதா கணவனுடன் சண்டை போட்டு பிறந்த வீட்டிற்கு சென்று அங்கு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் மனைவியை மீண்டும் வீட்டுக்கு வரவழைக்க மணி சந்தர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டார். ஆனால் மமதா வர மறுத்துவிட்டார்.இந்த நிலையில் மாமியார் வீட்டிற்கு சென்ற மணி சந்தர் மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்திருக்கிறார். ஆனால் அவர் வர மறுத்து விட்டார்.

இந்த விவகாரம் சண்டையாக மாறி மணி சங்கர் மமதாவை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடும் ஆத்திரம் அடைந்த மணி சந்தர் மனைவியின் மூக்கை கடித்து காயம் ஏற்படுத்தி அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

உறவினர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மமதாவை சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

குடும்ப சண்டையில் மனைவி மூக்கை கணவன் கடித்து காயப்படுத்தியது பற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.

இந்த விவகாரத்தில் சண்டையை விலக்க சென்ற மமதாவின் தந்தையும் படுகாயம் அடைந்துகுடும்பம் நடத்த வரமறுத்த மனைவியின் மூக்கை கடித்த கணவன்.

தெலுங்கானா மாநிலம் மஞ்சூரியால் மாவட்டம் கொத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மணி சந்தர். அவருடைய மனைவி மமதா. இரண்டு பேருக்கும் ஏழு ஆண்டுகளுக்கு முன் திருமண நடைபெற்று இரண்டு மகள்கள் உள்ளனர்.

மதுவுக்கு அடிமையான மணி சந்தர் மனைவியை வரதட்சணை கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மமதா கணவனுடன் சண்டை போட்டு பிறந்த வீட்டிற்கு சென்று அங்கு குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில் மனைவியை மீண்டும் வீட்டுக்கு வரவழைக்க மணி சந்தர் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டார். ஆனால் மமதா வர மறுத்துவிட்டார்.

இந்த நிலையில் மாமியார் வீட்டிற்கு சென்ற மணி சந்தர் மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்திருக்கிறார். ஆனால் அவர் வர மறுத்து விட்டார்.

இந்த விவகாரம் சண்டையாக மாறி மணி சங்கர் மமதாவை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடும் ஆத்திரம் அடைந்த மணி சந்தர் மனைவியின் மூக்கை கடித்து காயம் ஏற்படுத்தி அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

உறவினர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக மமதாவை சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

குடும்ப சண்டையில் மனைவி மூக்கை கணவன் கடித்து காயப்படுத்தியது பற்றி தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர்.
இந்த விவகாரத்தில் சண்டையை விலக்க சென்ற மமதாவின் தந்தையும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *