சிவகங்கை பையூர் கொத்தகுடி கண்மாய் பகுதியில் இரண்டு வாலிபர்கள் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர.
சிவகங்கை – தொண்டி சாலையில் உள்ள கொத்தக்குடி கண்மாயில் நேற்று பூப்பாண்டி, தெய்வேந்திரன் என்ற இரண்டு இளைஞர்களை 6 பேர் கொண்ட கும்பல் ஓட, ஓட விரட்டி கொலை செய்தது. இதுகுறித்து சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.
சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் தீபக் உத்தரவின் பேரில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சம்பவம் நடந்த இடத்தை சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்கள் அப்பகுதியில் இருந்த செல்போன் பதிவுகள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டும்
விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில் கொலை வழக்கில் தொடர்புடைய பில்லூரைச் சேர்ந்த பாலமுருகன் (24), தணராஜ் (19), சந்தோஷ் (19), மதுரையைச் சேர்ந்த சத்தீஸ்வரன் (25) மற்றும் கார்த்திவேல் (23) ஆகிய 5 பேரை தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர்.
மேலும், தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்க காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
