Headlines
5 பாட்டிலுக்கு தான் பணம் : கறார் டாஸ்மாக் ஊழியர்கள் , கலங்கும் குடிமகன்கள்

5 பாட்டிலுக்கு தான் பணம் : கறார் டாஸ்மாக் ஊழியர்கள் , கலங்கும் குடிமகன்கள்

ஒரு பாட்டில் கொண்டு வந்தால் பணம் திரும்ப தரமாட்டோம் – 5 பாட்டில் கொண்டு வந்தால் தான் பணம் திருப்பி தருவோம் என கோவில்பட்டி அருகே டாஸ்மார்க் கடையில் ஊழியர்கள் கறார் காட்டுவதால் மது பிரியர்கள் திண்டாடி வருகின்றனர். சாலைகளில், பொது இடங்களில், விவசாய நிலங்களில் உடைத்து வீசப்படும் மதுபாட்டில்களால் பல்வேறு தரப்பினரும் இன்னல் அடைந்தனர். இதை தடுப்பதற்காக கடந்த அரசுடாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை அமல்படுத்தியது. இதன் மூலம் கூடுதலாக பெறப்படும் 10…

Read More
மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் வன்கொ** : 4 சிறுவர்கள் கைது

மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் வன்கொ** : 4 சிறுவர்கள் கைது

திருச்சியில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி மாணவர்கள் 4 பேரை போலீசார் கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர். திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், பெற்றோர் இல்லாத மற்றும் மனநல பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 10 மற்றும் 9-ஆம் வகுப்பு பயிலும் நான்கு சிறுவர்கள், அந்த சிறுமியை அப்பகுதியில் கட்டப்பட்டு வரும் ஒரு பள்ளி கட்டிடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்….

Read More
உளுந்தூர்பேட்டையில் பிடிபட்ட கொள்ளை கும்பல் : கோவை போலீசாரிடம் ஒப்படைப்பு

உளுந்தூர்பேட்டையில் பிடிபட்ட கொள்ளை கும்பல் : கோவை போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவையில் தொழிலதிபரிடம் 1.6 கோடி ரூபாய் கொள்ளையடித்துவிட்டு உளுந்தூர்பேட்டை வழியாக தப்பிச்சென்ற 4 பேர் கொண்ட கொள்ளை கும்பலை உளுந்தூர்பேட்டை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்து விசாரணைக்காக கோவை போலீசாரிடம் ஒப்படைத்தனர். நான்கு பேரும் காரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவைக்கு அழைத்து வரப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் போலீசாரின் துரித நடவடிக்கையால் 1.6 கோடி ரூபாய் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் தொழிலதிபர் ஒருவரிடம் மர்ம கும்பல் சுமார் ஒரு…

Read More
கோவை to உளுந்தூர்பேட்டை : அலர்ட் செய்யப்பட்ட போலீசார் , அகப்பட்ட கொள்ளையர்கள்

கோவை to உளுந்தூர்பேட்டை : அலர்ட் செய்யப்பட்ட போலீசார் , அகப்பட்ட கொள்ளையர்கள்

கோவை: கோவை லட்சுமி மில்ஸ் பேருந்து நிறுத்தம் அருகே ஆந்திராவைச் சேர்ந்த நகை வியாபாரியிடம் ரூ.1.06 கோடி ரொக்கப் பணம் இருந்த பையைப் பறித்துக்கொண்டு காரில் தப்பிச் சென்ற நான்கு பேரை, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே போலீஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். பட்டப்பகலில், மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள அவிநாசி சாலையில் நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாக கோவை பந்தய சாலை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்தில் வந்து இறங்கிய நபர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி…

Read More
கோவையில் கொள்ளையடித்த கும்பல் : உளுந்தூர்பேட்டையில் மடக்கி பிடித்த போலீசார்

கோவையில் கொள்ளையடித்த கும்பல் : உளுந்தூர்பேட்டையில் மடக்கி பிடித்த போலீசார்

கோவை மாவட்டத்தில் பல லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், கொள்ளையடித்த பணம் மற்றும் நகைகளுடன் காரில் தப்பிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் 4 பேரை கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசார் உளுந்தூர்பேட்டை அருகே மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டத்தில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு பல லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. கொள்ளையடிக்கப்பட்ட பணம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு குற்றவாளிகள் கோயம்புத்தூரில் இருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் வழியாக…

Read More
மகளின் காதலன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய தாய் : போலீசார் விசாரணை

மகளின் காதலன் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றிய தாய் : போலீசார் விசாரணை

காவேரிப்பாக்கம் பகுதியில் மகளின் காதலன் மீது கொதிக்கும் எண்ணெயை தாய் ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் அடுத்த உத்திரம்பட்டு கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் (36) கூலி வேலை செய்து வருகிறார்.கணவர் இன்றி தனியாக வசிக்கும் இவருக்கு ஒரு மகனும் 18-வயதில் ஒரு மகளும் உள்ளனர். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு,உத்திரம்பட்டு பகுதியில் இருந்து காவேரிப்பாக்கம் முத்தீஸ்வரர் தெருவில் வாடகை வீட்டிற்கு தனது மகன் மற்றும் மகளுடன் குடிபெயர்ந்துள்ளார். இந்நிலையில் ஒச்சேரி அடுத்த…

Read More
போலீசார் மீது நடவடிக்கை எடுங்க : கமிஷ்னர் அலுவலகத்தில் பெண் புகார்

போலீசார் மீது நடவடிக்கை எடுங்க : கமிஷ்னர் அலுவலகத்தில் பெண் புகார்

ஒருதலைபட்சமாக செயல்படும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கணவரின் நிலைமை குறித்து தெரியவில்லை என பாதிக்கப்பட்ட பெண் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். திருப்பூர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கொங்கு வியாபாரிகள் நல சங்கத்தினர் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் மனு கொடுத்தனர். இதில் இதில் ஈ.பி. காலனி காந்திநகர் பகுதியில் திண்டுக்கல் அம்மன் மெஸ் என்ற ஹோட்டலை குணசீலா என்பவர் நடத்தி வருகிறார். குணசீலாவின் கணவர் மற்றும் மாமனார் ஆகியோர் கடந்த 17…

Read More
மலைவாழ் மக்களை மிரட்டி ரூ.1கோடி லஞ்சம் : வனச்சரகர்கள் உட்பட 6 பேர் சஸ்பெண்ட்

மலைவாழ் மக்களை மிரட்டி ரூ.1கோடி லஞ்சம் : வனச்சரகர்கள் உட்பட 6 பேர் சஸ்பெண்ட்

ஜவ்வாது மலையில் அரசுக்கு சொந்தமான காட்டு நிலத்தை தனி நபருக்கு பட்டா செய்து தருவதாக கூறி மலைவாழ் மக்களை மிரட்டி ரூ.1 கோடி வரை லஞ்சம் பெற்ற 3 வனச்சரக அலுவலர்கள் உட்பட 6 பேரை சஸ்பெண்ட் செய்து திருவண்ணாமலை மாவட்ட வன அலுவலர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் கிழக்கு தொடர்ச்சி மலையில் சுமார் 262 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஜவ்வாதுமலை பகுதி அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதியில் 250 க்கும் மேற்பட்ட கிராமங்களில்…

Read More
வாலிபர் தலை துண்டித்து கொ** : இருவர் கைது

வாலிபர் தலை துண்டித்து கொ** : இருவர் கைது

தென்காசி தலை துண்டித்து வாலிபர் வெட்டி கடையம் அருகே வாலிபர் தலை துண்டித்து கொல்லப்பட்ட வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர்.முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள பொட்டல்புதூர் பகுதியை சேர்ந்தவர் லெட்சுமணன் மகன் சந்தான பாலமுருகன் (28), கூலி தொழிலாளியான இவர் நேற்றிரவு பொட்டல் புதூர் தீபத் திடல் பகுதி வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள்…

Read More
இரு பகுதி இளைஞர்கள் மோதல் : ஆயுதங்களால் தாக்கும் பரபரப்பு வீடியோ

இரு பகுதி இளைஞர்கள் மோதல் : ஆயுதங்களால் தாக்கும் பரபரப்பு வீடியோ

வாணியம்பாடி அருகே இரண்டு பகுதிகளை சேர்ந்த இளைஞர்களுக்கு இடையே நடந்த மோதலில் 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்கள் கத்தியுடன் மோதி கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி அச்சத்தையும்,பீதியையும் ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பெரிய கொல்லகுப்பம் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கிஷோர் குமார் ,பரத் ,அஜய் ஆகிய 3 பேர் இரு சக்கர வாகனத்தில் வாணியம்பாடி மேட்டுபாளையம் பகுதிக்கு சென்று விட்டு மீண்டும் பெரிய கொல்லகுப்பம் நோக்கி சென்றுள்ளனர். அப்போது…

Read More