Headlines

வாலிபர் தலை துண்டித்து கொ** : இருவர் கைது

வாலிபர் தலை துண்டித்து கொ** : இருவர் கைது

தென்காசி

தலை துண்டித்து வாலிபர் வெட்டி கடையம் அருகே வாலிபர் தலை துண்டித்து கொல்லப்பட்ட வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர்.
முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தென்காசி மாவட்டம் கடையம் அருகேயுள்ள பொட்டல்புதூர் பகுதியை சேர்ந்தவர் லெட்சுமணன் மகன் சந்தான பாலமுருகன் (28), கூலி தொழிலாளியான இவர் நேற்றிரவு பொட்டல் புதூர் தீபத் திடல் பகுதி வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் தலையைத் துண்டித்து கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர்.

பொதுமக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியில் நடைபெற்ற இந்த பயங்கர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆழ்வார்குறிச்சி போலீசார் தலை மற்றும் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் தகவல் அறிந்ததும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் சம்பவ இடத்திற்கு வந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் ஆழ்வார்குறிச்சி போலீசார் மர்ம கும்பல் குறித்து அருகேயுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் விசாரணை மேற்கொண்டனர்.

அதில் பொட்டல்புதூரை சேர்ந்த கார்த்திக் ராஜா (22) மற்றும் அவரது அக்காவின் கணவர் ஆலங்குளம் மருதப்புரம் பகுதியை சேர்ந்த முத்தரசன் (24) ஆகியோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கார்த்திக் ராஜா தரப்பினர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் சந்தான பாலமுருகன் தரப்பை சேர்ந்தவரின் தோட்டத்திற்கு முயல் வேட்டைக்கு சென்றதாக கூறப்படுகிறது.

அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், அப்பகுதியினர் இந்த விவகாரத்தை பேசி முடித்து வைத்தனர்.

இந்த நிலையில் பொட்டல்புதூர் பகுதியில் கடந்த வாரம் கார்த்திக் ராஜா தரப்பினரை சந்தான பாலமுருகன் தரப்பினர் தாக்கியதாக கூறப்படுகிறது.

இதற்கு சந்தான பாலா முருகன் தான் காரணம் எனக்கூறி இந்த சம்பவம் நடைபெற்றதாக போலீசார் தரப்பில் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *