Headlines
தூத்துக்குடி : மாமனாருக்கு அரிவாள் வெட்டு : மருமகன் உட்பட 3 பேருக்கு போலீசார் வலை

தூத்துக்குடி : மாமனாருக்கு அரிவாள் வெட்டு : மருமகன் உட்பட 3 பேருக்கு போலீசார் வலை

தூத்துக்குடி முத்தையாபுரத்தில் மனைவி மற்றும் குழந்தைகளை தனது வீட்டிற்கு அனுப்பாத ஆத்திரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மாமனாரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடிய மருமகன் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி முத்தையாபுரம் வேலாயுதநகர் பகுதியைச் சேர்ந்தவர் முனியசாமி ராமலட்சுமி தம்பதி. இவர்களுக்கு ஒரு மகள் ஒரு மகன் உள்ளனர் முனியசாமி ஆட்டோ ஓட்டி வருகிறார் முனியசாமி மகளுக்கு மதுரையைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று…

Read More
வீட்டில் திருட முயன்ற வாலிபருக்கு தர்ம அடி : தப்பியோடிய மற்றொருவருக்கு வலை

வீட்டில் திருட முயன்ற வாலிபருக்கு தர்ம அடி : தப்பியோடிய மற்றொருவருக்கு வலை

பொன்னமராவதி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகளை திருட முயன்ற வாலிபரை, பொதுமக்கள் கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே அம்மாபட்டியில் இன்று அதிகாலை அந்த பூட்டிய வீட்டிற்குள் இருந்து பீரோவை உடைக்கும் சத்தம் வரவே அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்த போது, இரண்டு திருடர்கள் வீட்டின் பூட்டு மற்றும் பீரோவை உடைத்து நகைகளை திருட முயற்சி செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து வீட்டின் முன்பு…

Read More
மாணவியை மிரட்டி கர்ப்பமாக்கிய முதியவர் : போக்சோவில் கைது

மாணவியை மிரட்டி கர்ப்பமாக்கிய முதியவர் : போக்சோவில் கைது

மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 62 வயது முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே உள்ள நெற்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி (62). இவர் மாவு அரைக்கும் மில்லில் வேலை பார்த்து வருகிறார். இவர் தனது உறவுமுறை சார்ந்த, 12-ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவியை மிரட்டி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமி கர்ப்பமானதை அறிந்த அவரது தாயார்,…

Read More
ஒரு டூவிலரில் 4 பெண்கள் பயணம் : தொடர் போக்குவரத்து விதி மீறல்கள்

ஒரு டூவிலரில் 4 பெண்கள் பயணம் : தொடர் போக்குவரத்து விதி மீறல்கள்

​கோவையின் மிக முக்கிய மற்றும் பரபரப்பான அவிநாசி சாலையில், ஒரே இருசக்கர வாகனத்தில் 4 இளம் பெண்கள் ஆபத்தான முறையில் சாகசப் பயணம் செய்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும், ஏற்படுத்தி உள்ளது. கோவை, அவிநாசி சாலையில் உள்ள ஹோப் கல்லூரி பகுதியில் இருந்து கிருஷ்ணம்மாள் கல்லூரி வரை சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் ஒன்றில், ஒரே நேரத்தில் 4 இளம் பெண்கள் அமர்ந்து ஆபத்தான முறையில் பயணித்து உள்ளனர். ​சாலையில்…

Read More
ரேஷன் கடை பாமாயில் வீடுகளில் கொள்முதல் : சிக்கியவர்கள் தப்பியோட்டம்

ரேஷன் கடை பாமாயில் வீடுகளில் கொள்முதல் : சிக்கியவர்கள் தப்பியோட்டம்

குடியாத்தம் அருகே உள்ள கிராமங்களில் ரேஷன் கடையில் விற்பனை செய்யும் பாமாயில் பாக்கெட்டுகளை இரு சக்கர வாகனத்தில் வந்து வீடு வீடாக கூடுதல் விலைக்கு வாங்கிச் செல்பவர்களை பிடித்து அப்பகுதி இளைஞர்கள் வீடியோ எடுத்தவுடன் தப்பிச் செல்லும் வீடியோவை சமூக வலைதளங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் தட்டாங்குட்டை, கூடநகரம், மேலாளத்தூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருசக்கர வாகனத்தில் சில நபர் வீடு வீடாக ரேஷன் கடையில் பொதுமக்கள் வாங்கும் பாமாயில் எண்ணெயை கூடுதல் விலை…

Read More
அட்டப்பாடி : ஆற்றில் வீசப்பட்ட பெண், சிறுமியின் உடல் பாகங்கள் - போலீசார் விசாரணை

அட்டப்பாடி : ஆற்றில் வீசப்பட்ட பெண், சிறுமியின் உடல் பாகங்கள் – போலீசார் விசாரணை

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அருகே பவானி ஆற்றில் சாக்கு மூட்டைகளில் அடைக்கப்பட்ட நிலையில் பெண் மற்றும் சிறுமியின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அட்டப்பாடி புதூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சீரக்கடவு பகுதியில், செப்.6-ம் தேதி பவானி ஆற்றில் சாக்கு மூட்டைகள் மிதப்பதை அப்பகுதி மக்கள் கவனித்தனர். சாக்குகளில் இருந்து துர்நாற்றம் வீசியதைத் தொடர்ந்து அவற்றை சோதனையிட்டபோது மனித உடல் பாகங்கள் இருப்பது தெரியவந்தது. தகவலறிந்து வந்த புதூர் போலீசார் நடத்திய…

Read More
ஆற்றில் கொட்டப்படும் அரசு மருத்துவமனை கழிவுகள் – பொதுமக்கள் புகார்

ஆற்றில் கொட்டப்படும் அரசு மருத்துவமனை கழிவுகள் – பொதுமக்கள் புகார்

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி – வேதாரண்யம் சாலையில் அமைந்துள்ள அரசு மருத்துவமனைக்கு சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தினந்தோறும் உள் மற்றும் வெளிநோயாளிகளாக சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த நிலையில், மருத்துவமனையில் தினசரி சேகரிக்கப்படும் குப்பைகள், மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவக் கழிவுகள் மருத்துவமனையின் பின்புறம் உள்ள முள்ளியாற்றில் கொட்டப்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இதேபோன்று மருத்துவக் கழிவுகள் ஆற்றில் கொட்டப்பட்டு வருவதாகவும், இதனால் கழிவுகள் ஆற்று நீரில் கலந்து சுகாதார…

Read More
அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதி இளைஞர் உயிரிழப்பு

அமைச்சர் ஜெகதீஸ்வரியின் கார் மோதி இளைஞர் உயிரிழப்பு

தாம்பரம் அருகே காட்டாங்குளத்தூர் சிக்னலில் அமைச்சரின் உறவினர்கள் சென்றகார் மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 26 வயது இளைஞர் உயிரிழந்தார். காட்டாங்குளத்தூரைச் சேர்ந்த இறையன்பு (26), தனது ஹோண்டா டியோ மோட்டார் சைக்கிளில் காட்டாங்குளத்தூர் துலுக்கத்தம்மன் கோயில் திருவிழாவுக்குச் நேற்று நள்ளிரவு 12:30 மணியளவில் சென்று கொண்டிருந்தார். காட்டாங்குளத்தூர் சிக்னல் அருகே ஜிஎஸ்டி சாலையை மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி கடக்க முயன்றபோது, செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற TN 84 AZ 5941 என்ற மாருதி…

Read More
காட்டுப்பன்றிக்கு வைத்த வெடி வெடித்து பசுமாடு படுகாயம்: நடவடிக்கை எடுக்கக்கோரி வாக்குவாதம்

காட்டுப்பன்றிக்கு வைத்த வெடி வெடித்து பசுமாடு படுகாயம்: நடவடிக்கை எடுக்கக்கோரி வாக்குவாதம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே சூளகிரி அடுத்த உங்கட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் பசுமாடுகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகிறார். இன்று காலை, உங்கட்டி ஒட்டிய வனப்பகுதி அருகே தனது மாடுகளை மேய்த்து வந்துள்ளார். அப்போது, அங்கு காட்டுப்பன்றியை வேட்டையாடுவதற்காக மர்ம நபர்கள் வைத்திருந்த நாட்டு வெடியை மிதித்ததில் பசுமாடு ஒன்று படுகாயமடைந்தது. வெடி வெடித்ததில் பசுமாட்டின் வாய், முகம் மற்றும் தாடை பகுதிகள் சிதறி பலத்த காயமடைந்தன. ரத்தம் சொட்டச்சொட்ட பசுமாடு நின்றதைக் கண்ட…

Read More
திருடனுக்கே விபூதி : சிசிடிவியில் அடித்த அலாரம், தப்பியோடிய திருடன்

திருடனுக்கே விபூதி : சிசிடிவியில் அடித்த அலாரம், தப்பியோடிய திருடன்

நாட்றம்பள்ளி அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயற்சி செய்தபோது சிசிடிவியில் அலாரம் அடித்ததால் திருட வந்தவர் தப்பியோடிய சம்பவம் நடந்தேறியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தாரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி,மைதிலி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் இருவரும் சென்னையில் உள்ள கோயம்பேடு பகுதியில் தங்கி ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் பார்த்தசாரதிக்கு உடல்நிலை சரியில்லாததால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக மனைவி மைதிலியுடன் சென்னைக்கு சென்றுள்ளார். பின்னர்…

Read More