Headlines

ஆடு திருட முயன்ற இளைஞர்களுக்கு தர்ம அடி : சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

ஆடு திருட முயன்ற இளைஞர்களுக்கு தர்ம அடி : சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு

வாணியம்பாடியில் ஆட்டோவில் ஆடுகள் திருட முயன்ற ஆம்பூர் பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்களை அப்பகுதி மக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். கடந்த ஒரு மாத காலமாக ஆட்டோவில் சுற்றித்திரிந்து 15 க்கும் மேற்பட்ட ஆடுகள் திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெரியபேட்டை மற்றும் சென்னாம்பேட்டை பகுதிகளில் தொடர்ந்து கடந்த ஒரு மாத காலமாக 15 க்கும் மேற்பட்ட ஆடுகள் திருடு போனதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வந்த நிலையில் இன்று பெரியபேட்டை பகுதியில் பலமுறை சுற்றி சுற்றி வந்த ஆட்டோவை கண்காணித்த அப்பகுதி மக்கள் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது ஆட்டோவில் ஆடுகள் திருடி சென்ற தடயங்கள் இருந்ததை கண்டு இரண்டு இளைஞர்களை பிடித்து சரமாரியாக தாக்கி காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர். தகவல் அறிந்து சென்ற வாணியம்பாடி நகர் காவல் துறையினர் பொதுமக்கள் தாக்குதலுக்கு ஆளான இளைஞர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

சம்பவம் குறித்து இளைஞர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் ஆம்பூர், தேவலாபுரம் பகுதியை சேர்ந்த மதன் (37) மற்றும் வசந்த் (23) என்பதும், இருவரும் தொடர்ந்து ஆட்டோவில் வாணியம்பாடி பகுதிகளில் சுற்றித்திரிந்து ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் பட்டியில் மற்றும் வீதியில் உள்ள ஆடுகளை திருடி சென்றதும் தெரிய வந்தது.

மேலும் ஆடுகளை திருடும் ஆட்டோ அப்பகுதியில் சுற்றி திரியும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *