Headlines

பழங்குடியின பெண், சிசுவோடு உயிரிழப்பு : மர வியாபாரி வன்கொடுமை சட்டத்தில் கைது

பழங்குடியின பெண், சிசுவோடு உயிரிழப்பு : மர வியாபாரி வன்கொடுமை சட்டத்தில் கைது

காஞ்சிபுரம் அருகே பிரசவத்தின் வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணை
கடன் வாங்கி உள்ளதை காரணம் காட்டி வேலை செய்யும் இடத்தை விட்டு அனுப்பாததால் பிரசவத்தின் போது குழந்தையோடு உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் மர வியாபாரி மீது கொத்தடிமை தடுப்பு சட்டத்தின் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் வன்கொடுமை சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் சிங்காடிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆனந்தன், 40. தேன்மொழி 35 தம்பதியினர்.
இருளர் இனத்தைச் சேர்ந்த இவர்கள், காஞ்சிபுரம் அருகே உள்ள வெள்ளை கேட் பகுதியில் ஆறுமுகம் என்பவரிடம் கடனாக இருபதாயிரம் ரூபாய் பெற்றுக் கொண்டு அவரது மரக்கிடங்கில் மரம் வெட்டும் கூலி வேலை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தேன்மொழி 9 மாத கர்ப்பிணி பெண்ணாக இருந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது.தங்கி இருந்த இடத்திலேயே பிரசவம் ஆன நிலையில் எதிர்பாராத விதமாக உதிரப்போக்கு அதிகமானதால் தேன்மொழியும் பிறந்த குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த நிலையில் கர்ப்பிணிப் பெண் தேன்மொழி உயிரிழந்த சம்பவம் அறிந்து வந்த உறவினர்கள்,மரக்கிடங்கு உரிமையாளர் ஆறுமுகம் வாங்கியுள்ள கடனை காட்டி தேன்மொழியையும் அவரது கணவனையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்து பொன்னேரிக்கரை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்தனர். இந்த புகாரின் அடிப்படையில் தேன்மொழியின் உடலை மீட்டு செங்கல்பட்டு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு மரக்கடை உரிமையாளர் ஆறுமுகம் என்பவர் மீது கொத்தடிமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்திருந்திருந்தனர்.

இந்த நிலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்திட வலியுறுத்தி தேன்மொழியின் உறவினர்கள்‌ உட்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் காவல்நிலையம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் மரக்கடை உரிமையாளர் ஆறுமுகம் மீது வன்கொடுமை தடுப்பு சட்ட்த்தின் கீழ் தற்போது கூடுதலாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *