Headlines

TCD Newsroom

வேலூர் மாவட்டத்தில் கனமழை : குளம் போல் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு

வேலூர் மாவட்டத்தில் கனமழை : குளம் போல் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு, குடியாத்தம், மோர்தானா, கே வி குப்பம், சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசியது.இதனைத் தொடர்ந்து பேரணாம்பட்டு குடியாத்தம் கே வி குப்பம் மோர்தனா உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் பேரணாம்பட்டு விக்கோட்டா சாலை வழியாக ஆந்திரா கர்நாடகா செல்லும் முக்கிய சாலையில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு மழை தண்ணீருடன் கழிவு நீர்…

Read More
ஆற்று பாலத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து : 30 பயணிகள் காயம்

ஆற்று பாலத்தில் கவிழ்ந்த அரசு பேருந்து : 30 பயணிகள் காயம்

தென்காசி வேட்டைக்காரன்குளம் அருகே அரசு பேருந்து ஆற்று பாலத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர். தென்காசி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு 1- டூ-1 விரைவு அரசு பேருந்து சென்றது. பேருந்தை ஓட்டுநர் சிவசக்தியும், நடத்துநர் இசக்கிமுத்துவும் பணியில் இருந்தனர். வேட்டைக்காரன்குளம் அருகே ஆத்து பாலத்தில் சென்றபோது, எதிர்பாராத விதமாக பேருந்து நிலைதடுமாறி பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சுமார் 10 அடி ஆழத்தில் உள்ள ஆற்றில்…

Read More
தாராபுரம் இடைத்தேர்தல் : அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை

தாராபுரம் இடைத்தேர்தல் : அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம், உடுமலை சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கான அஇஅதிமுக நகர ஒன்றிய பேரூர் கழக கிளை கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அமைத்தலைவர் டி. டி .காமராஜ் தலைமையில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் செல்வகுமரன், மாவட்ட பொருளாளர் கிஷோர்குமார், சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பானுமதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது, நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கழக செய்தி தொடர்பாளர் பொங்கலூர் இரா மணி கண்டன், மாவட்ட…

Read More
நோ ரீல், ஒன்லி ரியல் : முன்னாள் அமைச்சர் சாமிநாதன்

நோ ரீல், ஒன்லி ரியல் : முன்னாள் அமைச்சர் சாமிநாதன்

நாம் ரீல் விட வேண்டியது இல்லை ரியல் சாதனைகளை சொன்னாலே போதும் வெற்றி பெற்று விடலாம் என முன்னாள் அமைச்சர் சாமிநாதன் இடைத்தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் நிர்வாகிகள் இடையே உரையாற்றினார். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுக வேட்பாளராக வழக்கறிஞர் சுகன்யா அறிவிக்கப்பட்டுள்ளார். தாராபுரம் தொகுதி தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் சாமிநாதன் மற்றும் பத்மநாபன் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பணிகள் தொடர்பாக எவ்வாறு செயல்பட வேண்டும் என திமுக நிர்வாகிகள்…

Read More
இரவலாக ஆட்களை பெற்று ஆட்சி நடத்தும் தவெக : முன்னாள் அமைச்சர் உதயகுமார்

இரவலாக ஆட்களை பெற்று ஆட்சி நடத்தும் தவெக : முன்னாள் அமைச்சர் உதயகுமார்

தமிழக வரலாற்றிலே இரவலாக ஆட்களை பெற்று ஆட்சி நடத்தும் ஒரே கட்சி தவெக தான் என முன்னாள் அமைச்சர் உதயகுமார்தெரிவித்தார். தேனி மாவட்ட அதிமுக அம்மா பேரவை நிர்வாகிள் கூட்டம் வீரபாண்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர்கள் முருக்கோடை ராமர் மற்றும் விடி நாராயணசாமி மற்றும் ஏறாளமாக அதிமுகவினர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்பி உதய குமார் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது ஆர்.பி…

Read More
கோவையில் தேசிய மக்கள் நீதிமன்றம் : 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவையில் தேசிய மக்கள் நீதிமன்றம் : 4085 வழக்குகளுக்கு தீர்வு

கோவையில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் நிகழ்வில் 4085 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. கோவை நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவர் மற்றும் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஸ்ரீதேவி தலைமையில் நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றம் உட்பட மேட்டுப்பாளையம் பொள்ளாச்சி வால்பாறை சூலூர் மற்றும் மதுக்கரை நீதிமன்றங்களிலும் இந்த தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.இதில் மாவட்ட முதன்மை நீதிபதி ஸ்ரீதேவி தேசிய மக்கள் நீதிமன்றத்தின் பயன்கள் குறித்து…

Read More
அடுத்தடுத்த வனத்துறை கைதுகள் : வேட்டை கும்பல் நடமாட்டம் ?

அடுத்தடுத்த வனத்துறை கைதுகள் : வேட்டை கும்பல் நடமாட்டம் ?

திருப்பூர் மாவட்டம் உடுமலை ஆனைமலைப் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அமராவதி வனச்சரகத்தில், அடுத்தடுத்து அரங்கேறி வரும் யானை மரணங்கள் மற்றும் தந்தங்கள் கடத்தல் சம்பவங்கள் பெரும் சந்தேகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன. கடந்த மாதம் 18-ஆம் தேதி இப்பகுதியில் 40 வயது மதிக்கத்தக்கப் பெண் யானை ஒன்று அழுகிய நிலையில் இறந்து கிடந்தது. அதன் அருகிலேயே ஆறு மாத குட்டி யானை ஒன்றும் மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இறந்த அந்தப் பெண் யானையின் கோரைப்பல் காணாமல் போயிருந்தது…

Read More
"தியாகம் செய்தவர்களுக்குத்தான் தியாகத்தின் அருமை தெரியும்” : துரைமுருகன்

“தியாகம் செய்தவர்களுக்குத்தான் தியாகத்தின் அருமை தெரியும்” : துரைமுருகன்

சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் மரபு மற்றும் விதிமுறைகளை மீறி பேசியதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த துரைமுருகன், “சட்டப்பேரவையில் பல்வேறு முக்கிய பிரச்சனைகள் இருக்கும்போது, அவற்றைப் பற்றி பேசாமல் பழைய சர்க்காரியா, மிசா போன்ற விவகாரங்களை முதலமைச்சர் விஜய் பேசியுள்ளார்” என விமர்சித்தார். மிசா காலத்தில் தாம் ஓராண்டு சிறையில் இருந்ததாகக் கூறிய துரைமுருகன், அப்போது ஸ்டாலினை காப்பாற்றுவதற்காக சிட்டிபாபு தாக்குதலை ஏற்றுக்கொண்டதாக தெரிவித்தார். “தியாகம்…

Read More
நாட்கள் எண்ணப்படுகிறது Mr.முதல்வர் விஜய் : கதிர் ஆனந்த் எம்.பி பேச்சு

நாட்கள் எண்ணப்படுகிறது Mr.முதல்வர் விஜய் : கதிர் ஆனந்த் எம்.பி பேச்சு

தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் உங்களுடைய ஆட்சியின் நாட்கள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது என வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் தெரிவித்தார். தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினை சட்டமன்றத்தில் அநாகரிகமாக பேசிய தமிழ் நாடு முதலமைச்சர் விஜயை கண்டித்து திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் வேலூர் அண்ணா சாலையில்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ நந்தகுமார் மற்றும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆகியோர் தலைமையில் நடைபெற்றஇந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க கட்சி…

Read More
சாலமன் பாப்பையாவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

சாலமன் பாப்பையாவின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

மதுரை தத்தனேரி மின் மயானத்தில் குண்டுகள் முழக்கமின்றி Guard of Honour கௌரவ மரியாதையுடன் பிரபல பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவின் உடல் தகனம் செய்யப்பட்டது. புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும் தமிழ் மொழியில் ஆளுமை பெற்றவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா, தனது 90-வது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார். உடல் நலக்​குறை​வால் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று கால​மா​னார். மக்களின் அஞ்சலிக்காக சாலமன் பாப்பையா உடல் ஞானஒளிவுபுரம் பகுதியில்…

Read More