Headlines

வேலூர் மாவட்டத்தில் கனமழை : குளம் போல் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு

வேலூர் மாவட்டத்தில் கனமழை : குளம் போல் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு, குடியாத்தம், மோர்தானா, கே வி குப்பம், சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று வீசியது.
இதனைத் தொடர்ந்து பேரணாம்பட்டு குடியாத்தம் கே வி குப்பம் மோர்தனா உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

இதனால் பேரணாம்பட்டு விக்கோட்டா சாலை வழியாக ஆந்திரா கர்நாடகா செல்லும் முக்கிய சாலையில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு மழை தண்ணீருடன் கழிவு நீர் கலந்து குளம் போல் தேங்கி நின்றதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகினர். பலத்த மழை ஏற்படும்போது
இந்த சாலையில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகளும் அப்பகுதியில் வாழும் பொது மக்களும் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

பேர்ணாம்பட்டு நகராட்சி மற்றும் மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம்
சாலையை சீரமைத்து கழிவுநீர் கால்வாய்களை சீர் செய்து மழை தண்ணீர் சாலையில் குளம் போல் தேங்கி நிற்காமல் வழி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மாநில நெடுஞ்சாலை மற்றும் பேரணாம்பட்டு நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
இந்நிலையில் குளம் போல் தேங்கி நிற்கும் மழைநீரில் முதியவர் ஒருவர் தனது மனைவியை இருசக்கர வாகனத்தில் அமர வைத்து தள்ளிக் கொண்டு செல்லும் காட்சி காண்போரை நெகிழ்ச்சியடைய செய்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *