தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் உங்களுடைய ஆட்சியின் நாட்கள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது என வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் தெரிவித்தார்.
தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினை சட்டமன்றத்தில் அநாகரிகமாக பேசிய தமிழ் நாடு முதலமைச்சர் விஜயை கண்டித்து திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் வேலூர் அண்ணா சாலையில்
கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ நந்தகுமார் மற்றும் வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற
இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த்:-
2G என்ற ஒரு C.A.G Report கொண்டு வந்து தி.மு.க கட்சி தான் ஊழல் செய்தது என்று பலர் சொன்னார்கள். நாடாளுமன்ற உறுப்பினர் ராசா நீதிமன்றத்திற்கு சென்று 2G வழக்கு பொய் வழக்கு என்று அதில் வென்று இருக்கிறார்.
தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் பேசியதை பொதுமக்கள் நீங்கள் பாருங்கள்.
பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் கொண்டு வந்து இந்திய நாடே தமிழ் நாட்டின் பக்கம் திரும்பி பார்க்க வைத்த முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினை குறித்து பேசுகிறார் தமிழ் நாடு முதலமைச்சர் விஜய். உங்களுடைய ஆட்சியின் நாட்கள் தற்போது எண்ணப்பட்டு வருகிறது Mr. முதலமைச்சர்.
தமிழக வெற்றி கழகம் ஆட்சிக்கு ஆதரவளித்த கம்யூனிஸ்ட் கட்சிகள் தற்போது விஜய் அரசு மீது விமர்சனம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். தமிழக வெற்றி கழகம் கட்சி ஒரு கூட்டம் கூட்டியது அதை கம்யூனிஸ்ட் கட்சிகள் புறக்கணித்திருக்கிறார்கள்.
மதுராந்தகம் இடை தேர்தலில் தி.மு.க வெற்றி பெற வேண்டும். அதற்கு தி.மு.க கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்களுடைய முழு உழைப்பை அளிக்க வேண்டும். என தெரிவித்தார்.
