Headlines

தாராபுரம் இடைத்தேர்தல் : அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை

தாராபுரம் இடைத்தேர்தல் : அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை

திருப்பூர் மாவட்டம் தாராபுரம், உடுமலை சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கான அஇஅதிமுக நகர ஒன்றிய பேரூர் கழக கிளை கழக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட அமைத்தலைவர் டி. டி .காமராஜ் தலைமையில் திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் செல்வகுமரன், மாவட்ட பொருளாளர் கிஷோர்குமார், சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பானுமதி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது,

நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கழக செய்தி தொடர்பாளர் பொங்கலூர் இரா மணி கண்டன், மாவட்ட பொருளாளர் சின்னப்பன், தாராபுரம் நகரச் செயலாளர் ராஜேந்திரன், மேற்கு ஒன்றியச் செயலாளர் பாலகுமாரன், தாராபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆதித்யன், குண்டடம் மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் குப்புசாமி, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் மகேஷ் குமார், உட்பட நகர ஒன்றிய பேரூர் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் கலந்து கொண்ட திருப்பூர் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் சிவசாமி ,
தலைமையால் அறிவிக்கப்பட்ட தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளை, கிளைக்கழக நிர்வாகிகளுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *