Headlines

மகேந்திரகிரி இஸ்ரோவில் செமி-கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி

மகேந்திரகிரி இஸ்ரோவில் செமி-கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி

நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள இஸ்ரோவின் உந்துவிசை ஆராய்ச்சி வளாகத்தில் (IPRC), 200 டன் முழு உந்துதல் திறனில் செமி-கிரையோஜெனிக் என்ஜின் பவர் ஹெட் டெஸ்ட் ஆர்ட்டிக்கிள் (PHTA) வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

2026 செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெற்ற இந்தச் சோதனையில், என்ஜினின் முழு உந்துதல் திறனான 200 டன் (100%) அளவில் பவர் ஹெட் இயக்கப்பட்டது.

PHTA-வில் த்ரஸ்ட் சேம்பர் தவிர, என்ஜினின் அனைத்து முக்கிய அமைப்புகளும் இடம்பெற்றுள்ளன.

இது PHTA-வில் நடத்தப்பட்ட தொடர் 9வது ஹாட் டெஸ்ட் ஆகும். இதற்கு முன்பு 47% (94 டன்), 60% (120 டன்) மற்றும் 88% (175 டன்) உந்துதல் அளவுகளில் சோதனைகள் வெற்றிகரமாக நடத்தப்பட்டிருந்தன.

தற்போது முதல்முறையாக 100% அதாவது 200 டன் முழு உந்துதல் அளவில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மொத்தம் 35 விநாடிகள் நடைபெற்ற இந்தச் சோதனையில், 200 டன் முழு உந்துதல் நிலையில் என்ஜின் பவர் ஹெட் 5 விநாடிகள் இயக்கப்பட்டது.

சோதனையின் போது பதிவான அனைத்து என்ஜின் அளவுருக்களும் எதிர்பார்த்தபடியே இருந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மேலும், எதிர்காலத்தில் நீண்ட நேர சோதனைகளை மேற்கொள்ளும் வகையில், குறைந்த அழுத்த தொடக்கத் தொட்டியில் இருந்து நடுத்தர அழுத்த இயக்கத் தொட்டிக்கு எரிபொருள் விநியோகத்தை மாற்றும் செயல்முறையும் வெற்றிகரமாக சரிபார்க்கப்பட்டது.

LVM3 ராக்கெட்டின் தற்போதைய L110 கோர் ஸ்டேஜை மாற்றும் வகையில், 2000 kN வகையைச் சேர்ந்த SE2000 என்ஜினைக் கொண்ட SC120 செமி-கிரையோஜெனிக் உந்துவிசை நிலை உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த செமி-கிரையோஜெனிக் நிலையுடன் மேம்படுத்தப்பட்ட C32 கிரையோஜெனிக் மேல்நிலையை இணைப்பதன் மூலம், LVM3 ராக்கெட்டின் சுமை ஏற்றிச் செல்லும் திறன் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *