Headlines

மனைவிக்கு அடி-உதை :கணவன், கள்ளக்காதலி கைது

மனைவிக்கு அடி-உதை :கணவன், கள்ளக்காதலி கைது

சிவகாசி தாலுகா விஸ்வநத்தம் பழையூரைச் சேர்ந்த 21 வயதான ஆனந்தி, முத்துக்குட்டி (22) என்பவரை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

ஆட்டோ ஓட்டி வரும் முத்துக்குட்டி, கடந்த சில மாதங்களாக வீட்டிற்கு சரியாக வராமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும், பெரியகொல்லப்பட்டியைச் சேர்ந்த தங்கமாரி (32) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, அவருடன் தங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனை ஆனந்தி மற்றும் அவரது குடும்பத்தினர் கண்டித்தும், முத்துக்குட்டி கேட்கவில்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து, பெரியகொல்லப்பட்டியில் உள்ள தங்கமாரி வீட்டிற்கு சென்ற ஆனந்தி, தனது கணவரிடமும் தங்கமாரியிடமும் குழந்தையைப் பார்க்கக்கூட ஏன் வரவில்லை? என தட்டிக்கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த முத்துக்குட்டி மற்றும் தங்கமாரி இருவரும் சேர்ந்து ஆனந்தியை தகாத வார்த்தைகளால் பேசி, கையால் தாக்கி கீழே தள்ளியதாக கூறப்படுகிறது.

மேலும், மீண்டும் இங்கு தேடி வந்தால் கழுத்தை அறுத்து கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆனந்தி அளித்த புகாரின் பேரில் இருக்கன்குடி போலீசார் முத்துக்குட்டி மற்றும் தங்கமாரி ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *