Headlines
அரசு மருந்தக பெண் ஊழியருக்கு சரமாரி கத்திக்குத்து : பண்ருட்டியில் பரபரப்பு

அரசு மருந்தக பெண் ஊழியருக்கு சரமாரி கத்திக்குத்து : பண்ருட்டியில் பரபரப்பு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி காமராஜ் நகரில் உள்ளதமிழக முதல்வர் மருந்தகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் திவ்யா. 23., இந்த நிலையில் இன்று வழக்கம் போல் பணியில் இருந்தபோது திடீரென மது போதையில் வந்த வாலிபர் மருந்தகத்தின் உள்ளே நுழைந்து அதில் பணியாற்றிய திவ்யாவை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் மயக்க நிலை அடைந்த அவரை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மீட்டு, கத்தியால் குத்தியவாலிபரை அறையில் வைத்து பூட்டி போலீசாருக்கு தகவல்…

Read More
மெயிலுக்கு மெயிலில் பதில், வீடியோ பதில் ஏற்புடையதல்ல : அமைச்சர் வன்னியரசு

மெயிலுக்கு மெயிலில் பதில், வீடியோ பதில் ஏற்புடையதல்ல : அமைச்சர் வன்னியரசு

வெளிநாட்டில் படிக்கும் ஆராய்ச்சி மாணவர் பாரதிதாசனுக்கு அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என அமைச்சர் வன்னியரசு உறுதியளித்தார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் மாவீரன் இரட்டைமலை சீனிவாசன் நினைவு நாளையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-திராவிட அரசியலின் அடித்தளம் மாவீரன் இரட்டைமலை சீனிவாசன். ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக பிரிட்டிஷாரிடம் போராடி உரிமை பெற்றுத் தந்தவர். வட்டமேஜை மாநாட்டில்…

Read More
திருச்சியில் விவசாயிகள் தொடர் போராட்டம் : ஈரோடு மாவட்ட விவசாயிகள் ஆதரவு

திருச்சியில் விவசாயிகள் தொடர் போராட்டம் : ஈரோடு மாவட்ட விவசாயிகள் ஆதரவு

திருச்சி சமயபுரத்தில் முழுமையான பயிர்கடன் தள்ளுபடியை வலியிறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஈரோடு மாவட்ட விவசாயிகள் நேரில் சென்று ஆதரவளித்தனர். முதல்வர் விஜய் தேர்தலின் போது அறிவித்தபடி, விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய பயிர்க்கடன்களை தமிழக அரசு எந்தவித நிபந்தனையுமின்றி முழுவதும் தள்ளுபடி செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி,40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் திருச்சி சமயபுரம் பகுதியில் 4 வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைசத்தியமங்கலம், புளியம்பட்டி, நம்பியூர் பகுதியை…

Read More
பிரதமர் மோடி பிறந்தநாள் : 3001 தீபங்களில் மோடி உருவம் - பாஜகவினர் கொண்டாட்டம்

பிரதமர் மோடி பிறந்தநாள் : 3001 தீபங்களில் மோடி உருவம் – பாஜகவினர் கொண்டாட்டம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் 76-வது பிறந்தநாளையொட்டி, கோவை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் கவுண்டம்பாளையம் பகுதியில் பல்வேறு விமரிசையான கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கவுண்டம்பாளையத்தில் உள்ள ‘ஸ்ரீ சுஹிதா ஹாலில்’ நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் , பாரத தேசத்தின் வளர்ச்சி மற்றும் பிரதமரின் நீண்ட ஆயுளை வேண்டி 3,001 ‘ஆசீர்வாத தீபங்கள்’ ஏற்றப்பட்டன. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடியின் பிரம்மாண்ட உருவ வடிவில் தரையில் தீபங்கள் வரிசையாக அடுக்கப்பட்டு சுடர்விடச் செய்யப்பட்டது பார்வையாளர்களைப்…

Read More
பெட்ரோலிய பொருட்கள் விலை உச்சம் : பாகிஸ்தானில் கட்டுப்பாடுகள் அமல்

பெட்ரோலிய பொருட்கள் விலை உச்சம் : பாகிஸ்தானில் கட்டுப்பாடுகள் அமல்

பாகிஸ்தானில் எல்பிஜி, பெட்ரோல், டீசல் விலைகள் புதிய உச்சங்களைத் தொட்டதால், கடுமையான புதிய கட்டுப்பாடுகளை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு அதிகாரிகளின் வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 50% குறைக்கப்பட்டுள்ளது.புதிய வாகனங்கள் வாங்க அரசு துறைகளுக்கு முழுத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து கடைகளும் இரவு 9 மணிக்குள் மூட வேண்டும்.திருமண விழாக்களில் ஒரே ஒரு உணவு வகை மட்டுமே வழங்க அனுமதி. அரசு விருந்துகள் அனைத்தும் ரத்து என அதிரடி அறிவிப்பை பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

Read More
விவசாயிகளுக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை : அமைச்சர் வெங்கடரமணன்

விவசாயிகளுக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை : அமைச்சர் வெங்கடரமணன்

தமிழகம் முழுவதும் நெல் சேமிப்பு கிடங்குகள் அமைக்கப்பட்டு வருகிறது,விவசாயிகளுக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம், பெருங்கட்டூரில் ரூபாய் 3.90 கோடி மதிப்பீட்டில் மேற்கூரை அமைப்புடன் கூடிய நெல் சேமிப்பு தளங்கள் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. இவ்விழாவில் மாநில உணவு மற்றும் உணவு ப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன் கலந்து…

Read More
மாணவியை பிரம்பால் தாக்கிய தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

மாணவியை பிரம்பால் தாக்கிய தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

கோவை, பெரியநாயக்கன்பாளையம் அருகே மாணவியை குச்சியால் அடித்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். கோவை, பெருநாயக்கன்பாளையத்தை அடுத்த நாயக்கன்பாளையம் ஊராட்சி, பாலமலை அருகே, குஞ்சூர் பகுதியில் பழங்குடியினர் உண்டு, உறைவிட பள்ளி உள்ளது. இங்கு தலைமை ஆசிரியையாக கிருஷ்ண பிரியா மற்றும் ஐந்து ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 43 மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டுப் பாடம் எழுதாமல் வந்ததாக…

Read More
"வீட்டின் கதவை உடைத்து உணவுத் தேடிய காட்டுயானை" ; பொதுமக்கள் பீதி!

“வீட்டின் கதவை உடைத்து உணவுத் தேடிய காட்டுயானை” ; பொதுமக்கள் பீதி!

கோவை மாவட்டம், தடாகம் அருகே உச்சையனூர் பகுதியில் நள்ளிரவில் புகுந்த ஒற்றைக் காட்டு யானை அடுத்தடுத்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து உணவைத் தேடிய சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே கடும் அச்சத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. கோவை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலை அடியவாரப் பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் தடாகம் எஸ்.எம். நகரில் மாட்டு கொட்டகைக்குள் புகுந்து மாட்டைத் தாக்க முயன்ற சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி…

Read More
வைக்கோல் லாரியில் மின்சார கம்பி உரசியதால் தீ விபத்து : சிறுவன் உயிரிழப்பு

வைக்கோல் லாரியில் மின்சார கம்பி உரசியதால் தீ விபத்து : சிறுவன் உயிரிழப்பு

சாணார்பட்டி  அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி மீது மின்சார கம்பி உரசியதில் தீ விபத்து ஏற்பட்டு 17 வயது சிறுவன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே மார்க்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர் தஞ்சை மாவட்டத்திலிருந்து வைக்கோல் ஏற்றி வந்து சாணார்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் கால்நடைகளுக்கு வைக்கோல் விற்பனை செய்து வருகிறார். இன்று தஞ்சையிலிருந்து வைக்கோல் ஏற்றி வந்த லாரியின் தார்பாயை கணேசனின் 17 வயது மகன் பெரிய கருப்பன் அகற்றும்…

Read More
தேனி : நாளைய பிரதமர் விஜய் - தவெக போஸ்டரால் பரபரப்பு

தேனி : நாளைய பிரதமர் விஜய் – தவெக போஸ்டரால் பரபரப்பு

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் தேனி நகர்ப்பகுதிகளில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மையப்படுத்தி ஒட்டப்பட்டுள்ள அரசியல் சுவரொட்டிகள், அப்பகுதியில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தேனி வடக்கு மாவட்டம், தேனி நகரம் 23-வது வார்டு சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டரில், த.வெ.க தலைவர் விஜய்யின் புகைப்படத்துடன் சில தீவிரமான அரசியல் முழக்கங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, 2026-ல் தமிழகத்தின் வெற்றி முதலமைச்சர் 2029-ல் இந்தியாவை ஆளப்போகும் நாளைய பிரதமர் என்ற வாசகங்கள் அதில் பிரதானமாக இடம்பெற்றுள்ளன….

Read More