முழுமையான பயிர்கடன் தள்ளுபடியை வலியிறுத்தி கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் இரவிலும் விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
முதல்வர் விஜய் தேர்தலின் போது அறிவித்தபடி, விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய பயிர்க்கடன்களை தமிழக அரசு எந்தவித நிபந்தனையுமின்றி முழுவதும் தள்ளுபடி செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி,
40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் பங்கேற்கும் தொடர் காத்திருப்பு போராட்டம் சமயபுரம் அருகில் நேற்று
மூன்றாவது நாளாக நடைபெற்றது.
நேற்று இரவு மழை பெய்த போது விவசாயிகள் கும்மியடித்து சிறு குறு விவசாயி என பிரிக்காதே அனைவருக்கும் கடன் தள்ளுபடி கொடு என கும்மி பாட்டு பாடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சமயபுரம் பகுதியில் இரவில் மழை பெய்து வரும் நிலையிலும விவசாயிகள் கும்மியடித்து போராட்டத்தில் ஈடுபட்டது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது.
