கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடி : விசில் ஊதி விவசாயிகள் போராட்டம்
கூட்டுறவு சங்கங்களில் பெற்ற பயிர்க்கடன்களை எவ்வித நிபந்தனையுமின்றி முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே 500-க்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று 4-வது நாளாகத் தொடர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டமன்ற தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி, கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன்களைத் தமிழக அரசு உடனடியாக முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இக்கோரிக்கையை வலியுறுத்தி 40-க்கும் மேற்பட்ட விவசாயச் சங்கங்களின் தலைவர்களும் நிர்வாகிகளும் ஒருங்கிணைந்து…
