Headlines

அரசு மருந்தக பெண் ஊழியருக்கு சரமாரி கத்திக்குத்து : பண்ருட்டியில் பரபரப்பு

அரசு மருந்தக பெண் ஊழியருக்கு சரமாரி கத்திக்குத்து : பண்ருட்டியில் பரபரப்பு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி காமராஜ் நகரில் உள்ள
தமிழக முதல்வர் மருந்தகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருபவர் திவ்யா. 23., இந்த நிலையில் இன்று வழக்கம் போல் பணியில் இருந்தபோது திடீரென மது போதையில் வந்த வாலிபர் மருந்தகத்தின் உள்ளே நுழைந்து அதில் பணியாற்றிய திவ்யாவை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதனால் ரத்த வெள்ளத்தில் மயக்க நிலை அடைந்த அவரை சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மீட்டு, கத்தியால் குத்தியவாலிபரை அறையில் வைத்து பூட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் அடிப்படையில் அங்கு விரைந்து வந்த போலீசார் அவரை அழைத்து சென்றனர்.

ரத்த வெள்ளத்தில் இருந்த பெண் ஊழியரை அக்கம் பக்கத்தினர்
இருசக்கர வாகனத்தின் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு
அனுப்பி வைத்தனர்.
அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

பட்ட பகலில் அரசு மருந்தகத்தில் பெண் ஊழியரை கத்தியால் குத்திய சம்பவம் அப்பகுதியில் மக்களிடையே அச்சத்தையும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து பண்ருட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *